தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2024 ஆம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி, சனிகிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், கார்த்திகை 15 ம் தேதி சனிக்கிழமை
அமாவாசை. இன்று காலை 11.03 வரை சதுர்த்தசி, அதற்கு பிறகு அமாவாசை. பகல் 01.39 வரை விசாகம், பிறகு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை - 07.45 முதல் 08.45 வரை; மாலை - 03.15 முதல் 04.15 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 10..45 முதல் 11.45 வரை; மாலை 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல்10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
சந்திராஷ்டமம் - ரேவதி, அஸ்வினி
இன்றைய ராசிபலன் :
மேஷம் - தொழில் வெற்றிகரமாக இருக்கும். வேலையில் சாதமாக சூழல் ஏற்படும். புதிய வேலைகளை துவங்குவதற்கு ஏற்ற நாள். வாழ்க்கை துணையுடன் இருந்த சிக்கல்கள் தீரும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான பணிகளை செய்வீர்கள்.
ரிஷபம் - கவனமாக இருக்க வேண்டிய நாள். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொருளாதாரம் சீராக இருக்கும். புதிய முதலீடுகளில் ஆர்வம் ஏற்படும். குடும்ப பிரச்சனைகளை பேசி தீர்ப்பீர்கள். வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் ஏற்படும்.
மிதுனம் - கடின உழைப்பு தேவைப்படும் நாள்.உங்களின் செயல்பாடுகளை மேல் அதிகாரிகளால் கவனிக்கப்பட்டு, பாராட்டு பெறும். இருந்தாலும் இலக்குகளில் கவனம் வைப்பது சிறப்பு. திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு திருமண கைகூடும் வாய்ப்பு அமையும். காதல் வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் தீரும். பயணங்களில் தாமதம் ஏற்படலாம்.
கடகம் - வீட்டில் விருந்தினர் வருகையில் மகிழ்ச்சி ஏற்படும். பழைய முதலீடுகளில் லாபம் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். உணவு பழக்கத்தில் கவனம் அவசியம். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
சிம்மம் - செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்களை தேட வேண்டிய அவசிய சூழல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் பொறுமையை கடைபிடிப்பது சிறப்பு. பண பரிவர்த்தனையை தவிர்ப்பது நல்லது. குடும்ப பிரச்சனைகளை பேசி தீர்க்க வேண்டும். கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.
கன்னி - தொழிலில் பாராட்டுக்கள் கிடைக்கும். நிதி தொடர்பான முடிவுகள் சாதகமாகும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளியூர் பயணங்களில் தாமதம் ஏற்படலாம். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் பயிற்சி செய்து, உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கும் விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது.
துலாம் - தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். பழைய முதலீடுகளில் லாபம் ஏற்படும். சொத்து தொடர்பான சட்ட பிரச்சனைகள் தீரும். வாழ்க்கை துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது சிறப்பு.
விருச்சிகம் - நிதி நிலை சிறப்பாக இருக்கும். பழைய முதலீடுகளில் லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.
தனுசு - விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் ஆசை அதிகரிக்கும். குடும்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வேலை சுமை அதிகரிக்க வாய்ப்புள்ளது. வருமானம் உயர்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.
மகரம் - கவனமாக இருக்க வேண்டிய நாள். செயல்கள் எதிர்பார்த்த பலனை தராமல் போகலாம். குடும்பத்தில் தவறான புரிதல்களால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழிலில் மரியாதை அதிகரிக்கும். மனஅழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கும்பம் - பழைய முதலீடுகள் லாபம் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கடுமையாக உழைக்க வேண்டிய நாள். உத்தியோகம் தொடர்பாக திடீர் பயணங்கள் செய்ய வேண்டி இருக்கும். வாழ்க்கை துணையின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பது சிறப்பு
மீனம் - நிதி நிலைமை வலுவாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் ஏற்படும். பயண வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்படலாம். ஒவ்வாமை பிரச்சனை ஏற்படலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வயசுக்கு முக்கியம் தரணும்.. இளம் நடிகையுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க மறுத்த மாதவன்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் கூலி படத்தின் முதல் வார வசூல் இவ்வளவா.. அதிர வைக்கும் டேட்டா!
கூலி நடிப்புக்குக் கிடைக்கும் அப்ளாஸ்.. ஸ்ருதி ஹாசன் செம ஹேப்பியாம் !
புலி வேட்டையாடும்போது அணில்கள் குறுக்கமறுக்க ஓடுது... விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான்!
வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி... நீலகிரி, கோவை மலைப்பகுதிகளுக்கு கனமழை... வானிலை மையம்
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கட்சி பேதம் இன்றி அனைத்து எம்.பிக்களும் ஆதரிக்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி
உணர்வு ததும்பும் மதுரை மண்ணில்... இதயம் திறந்து... இரண்டு கைகளை விரித்துக் காத்திருப்பேன்: விஜய்!
ஆடி போயிருச்சு ஆவணி வந்தாச்சு.. டாப்புக்கு வந்துருவோம் மக்களே.. நம்பிக்கையோடு செயல்படுங்க!
தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியராக்குங்கள் - பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}