தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு ஜூலை 31 ம் தேதி, வியாழக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விசுவாவசு வருடம், ஆடி 15ம் தேதி வியாழக்கிழமை
அதிகாலை 03.59 வரை சஷ்டி திதியும் பிறகு சப்தமி திதியும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்திரை நட்சத்திரம் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 10.45 முதல் 11.45 வரை; மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் : காலை 12.15 முதல் 01.15 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
சந்திராஷ்டமம் - பூரட்டாதி
மேஷம் - சமூகத்தில் மதிப்பு கூடும். பெண்களிடம் பேசும்போது கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய டெக்னாலஜி பயன்படுத்தலாம். தம்பதிகளுக்குள் ஒற்றுமை இருக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். உடல் நலம் தேறும்.
ரிஷபம் - புதிய நண்பர்களிடம் கவனமாக இருங்கள். நண்பர்களுடன் சண்டை வேண்டாம். உடன் பிறந்தவர்கள் உதவுவார்கள். வீட்டில் சந்தோஷம் இருக்கும். வேலையில் அமைதியாக இருங்கள். உடல்நல பிரச்சனைகள் நீங்கும்.
மிதுனம் - தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பழைய பிரச்சினைகள் தீரும். ஆன்மீக பயணம் செல்வீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடும். வேலையில் மேலதிகாரிகளிடம் சண்டை வேண்டாம். பெண்கள் வீட்டு விஷயங்களை மற்றவர்களிடம் சொல்ல வேண்டாம்.
கடகம் - மார்க்கெட்டிங் வேலை செய்பவர்களுக்கு அலைச்சல் அதிகமாக இருக்கும். வேலையில் எதிரியாக இருந்த அதிகாரி மாறுவார். நண்பர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். பணம் வர தாமதமாகும். கணவரின் உதவி கிடைக்கும்.
சிம்மம் - பணம் நிறைய வரும். குடும்பத்தினரை நம்புங்கள். நண்பர்கள் ஆலோசனை கூறுவார்கள். நினைத்த காரியம் நடக்கும். பணம் அதிகமாக இருக்கும். உறவினர்களால் நன்மை உண்டாகும். பிள்ளை வெளிநாடு செல்வார். உடல் நலம் சரியாகும்.
கன்னி - வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பார்கள். பிள்ளைகளுக்கு நல்ல வரன் கிடைக்கும். பணம் வரும். பிள்ளைகளால் சந்தோஷம் அடைவீர்கள்.
துலாம் - பயணத்தால் லாபம் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களால் நன்மை உண்டாகும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக இருக்கும். தம்பதிகளுக்குள் அன்பு அதிகரிக்கும். நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். பிரிந்த உறவினர்கள் தேடி வருவார்கள்.
விருச்சிகம் - தொழிலதிபர்களிடம் இருந்து வேலை செய்பவர்கள் தொழில் ரகசியங்களை கற்றுக்கொள்வார்கள். நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். வியாபாரம் நன்றாக நடக்கும். பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் பிரச்சினைகளை தீர்க்க முயற்சிப்பார்கள்.
தனுசு - புதிய பொருட்களால் செலவுகள் அதிகரிக்கும். பயம் போகும். பேசாதவர்கள் பேசுவார்கள். வேலையில் சக ஊழியர்களால் நன்மை உண்டாகும். பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்பார்கள். உடல் ஆரோக்கியம் சரியாகும்.
மகரம் - வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அரசு வேலைகளில் கவனமாக இருங்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். பண விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். கணவன் மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. வேலையில் முக்கியமான ஃபைல்களை கையாளும் போது கவனம் தேவை.
கும்பம் - வேலை செய்பவர்களுக்கு வீட்டுக் கடன் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் நட்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கும். உறவினர்களால் நன்மை உண்டு. உடல் வலிமை உண்டாகும்.
மீனம் - இன்று சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். குழப்பங்கள் ஏற்படும். கடவுளை மட்டும் பிரார்த்தனை செய்யுங்கள். தடைகள் இருப்பதால் புதிய முயற்சிகள் எடுக்க வேண்டாம்.
நலம் காக்கும் ஸ்டாலின்.. உங்கள் குடும்பத்தின் நலன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
கவினும் நானும் உண்மையாக காதலித்தோம்... எங்க அப்பா அம்மாவுக்கு தொடர்பில்லை... சுபாஷினி விளக்கம்!
கிராமங்களில் உள்ள சிறு குறு கடைகளுக்கு உரிமம் தேவையில்லை: தமிழக அரசு!
அரசு ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதியம் வழங்கி, பணி நிலைப்படுத்த வேண்டும் - சீமான்!
பாஜக கூட்டணியில் இருந்து விலகினார் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்
மோடியா இந்த லேடியா என்று கேட்டு அதிர விட்டவர் ஜெயலலிதா.. அடுத்தடுத்து அதிரடி காட்டும் ஓபிஎஸ்!
மாலேகான் குண்டுவெடிப்பு.. பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா தாக்கூர் உட்பட 7 பேர் விடுதலை
பாஜக மாநில அளவிலான பதவியில் குஷ்பு.. விஜயதாரணிக்கு இந்த முறையும் பதவி இல்லை!
மத்திய அரசுக்கு நேற்று.. மாநில அரசுக்கு இன்று.. கண்டனத்திலும் பேலன்ஸ் செய்யும் ஓ.பி.எஸ்!
{{comments.comment}}