- ஸ்வர்ணலட்சுமி
விசுவாச ஆண்டு 2025 மே மாதம் 12ஆம் தேதி திங்கட்கிழமை அன்று சித்ரா பௌர்ணமி. சித்திரை மாதத்தில் முழு நிலவு நாளான பௌர்ணமி அன்று கொண்டாடப்படும் ஒரு புனிதமான நாள் இந்த சித்ரா பௌர்ணமி.
சித்திரகுப்தர்: நாம் செய்யும் நல்ல மற்றும் கெட்ட பதிவுகளில் கணக்கை பராமரிக்கும் இந்து தெய்வம் இவர். எமனின் கணக்காளரான சித்திரகுப்தனுக்காக சித்ரா பௌர்ணமி விழா அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அவரவர் கர்ம வினைகளை கழுவுவதை குறிக்கும் வகையில் புனித நதிகளில் நீராடுவார்கள்.
தமிழ்நாட்டில் பக்தர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சித்ரா நதியில் நீராடுவார்கள். திருவண்ணாமலை கிரிவலம் செய்வது ,பிற இடங்களுக்குச் செல்வது மற்றும் பூஜை சடங்குகள் செய்வது இந்நாளில் நன்மை பயக்கும். பௌர்ணமி திதியும் சித்ரா நட்சத்திரமும் கலந்த நன்னாளில் கடலில் குளிப்பது பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
நேரம் :பௌர்ணமி திதி ஆரம்பம் மே 11 , 2025 அன்று இரவு 8 :01ஒரு மணி தொடங்கி மே 12 திங்கட்கிழமை அன்று இரவு 10:25 மணி வரை உள்ளது.

கேரளாவில் சித்ரா பௌர்ணமி கொண்டாட்டம்: கேரளாவில் கொண்டாடும் முறை -திருவனந்தபுரம் மாவட்டத்தில் பச்சலூரில் உள்ள சித்ரா பௌர்ணமி வலிய தோட்டம் பகவதியின் பழைய கோவிலில் விழாக்கள் நடத்தப்படுகின்றன .சக்தி தேவைக்கு அர்ப்பணிக்கப்பட்ட இவ்விழா கடந்த இருநூறு ஆண்டு காலமாக கொண்டாடுவதாக கூறப்படுகிறது.
சிறப்புக்கள்: சித்ரா பௌர்ணமி நாளில் சித்ரகுப்தர் முதலில் பார்வதி தேவிக்கு ஒரு ஓவிய வடிவில் பிறந்ததாகவும் பிறகு கோமாதா காமதேனுவின் கருப்பையில் நுழைந்து இந்த சிறப்பான நாளில் பிறந்தார் என்பது நம்பிக்கை. சித்திரகுப்தர் மனிதர்களின் பாவ, புண்ணிய கணக்குகளை எழுதும் கடவுள் ஆவார். கர்ம வினைகள் நீங்க அவரை கும்பிடுவது சிறப்பு. இந்த நாளில் நல்ல செயல்கள் செய்வதன் மூலம் தங்கள் பாவங்களை குறைக்க முடியும் என்று நம்புகிறார்கள் .தான தர்மங்கள் செய்ய உகந்த நாள் இந்த சித்ரா பௌர்ணமி நன்னாள்.
இந்நாளில் பசும் பாலான பொருட்களை பக்தர்கள் உட்கொள்வதை தவிர்க்கிறார்கள் .விரதம் கடைப்பிடித்து உப்பு சேர்க்காமல், தயிர் உணவில் சேர்த்துக்கொண்டு உண்பார்கள். உணவும் உப்பில்லாமல் உண்பதே இந்த விரதத்தில் சிறப்பு. வீட்டு வாசலில் சுத்தம் செய்து அரிசி மாவினால் கோலம் போடுவார்கள். சிலர் பௌர்ணமி பூஜை கலசம் வைத்து வீடுகளில் பூஜை செய்வார்கள். சத்யநாராயணா பூஜை செய்வது மிகவும் சிறப்பானதாகும்.
சித்ரகுப்தர் வழிபாடு செய்வதினால் கர்ம வினைகள் குறையும். குடும்பத்தில் அமைதி நிலவும் .தொழில் சிறக்கும், உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் மகிழ்ச்சி, அமைதியும் கிடைக்கும். சொல்ல வேண்டிய மந்திரம் :"ஓம் சித்ரகுப்தாய நமஹ "என்று கூறி சித்ரா பௌர்ணமி அன்று பூஜை செய்து அனைவரும் நல் வாழ்வு வாழ்வோமாக. அனைவருக்கும் சித்ரா பௌர்ணமி நாளில் நல்ல வளமும் நலமும் கிடைக்கட்டும்.
மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}