பெளர்ணமியிலும் சிறந்த.. பிங்க் மூன்.. இன்று இரவு காணத் தவறாதீர்கள்!

Apr 12, 2025,12:59 PM IST
-ஸ்வர்ணலட்சுமி

ஏப்ரல் 12 2025 சனிக்கிழமை அன்று முழு நிலவு நாள் பௌர்ணமி. பிங்க் மூன் :இரவு 8: 22 மணிக்கு நடைபெறும் முழு நிலவை இளஞ்சிவப்பு நிலா என்றும் அழைக்கப்படுகிறது .இந்த முழு நிலவு இளஞ்சிவப்பு காட்டுப் பூக்களின் நினைவாக பிங்க் மூன்(pink moon) என்று அழைக்கப்படுகிறது .

மைக்ரோ மூன் :(micro moon)ஏப்ரல் மாத முழு நிலவு மிக தொலைதூர முழு நிலவாக இருக்கும் இதனை மைக்ரோ மூன்(micro moon)என்று அழைக்கப்படுகிறது. இந்நாள் மிகவும் சிறப்பான நாள் அதாவது சனிக்கிழமை யுடன் பௌர்ணமியும் சேர்ந்து வந்திருப்பது அதீத விசேஷம்.

இந்த சிறப்பான நாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது அதீத சிறப்பு வாய்ந்ததாகும். பாவங்கள் நீங்கி ,முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த பௌர்ணமி நாளில் சைவர்கள் விரதம் இருந்து கஞ்சி காய்ச்சி சித்திரபுத்திரனார் கதை படித்து எல்லோருக்கும் கஞ்சி வார்ப்பார் என்று கூறப்படுகிறது.

நேரம் :ஏப்ரல் 12ம் தேதி சனிக்கிழமை காலை 4:13 முதல் ஏப்ரல் 13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 :03 வரை பௌர்ணமி திதி உள்ளது. 



முக்கியத்துவம்: பௌர்ணமி இந்திய கலாச்சாரம் மற்றும் இந்து மதத்தில் மிகவும் முக்கியமான நாளாக கருதப்படுகிறது. இந்த நாள் பல ஆன்மிகச் செயல்கள் தெய்வீக பூஜைகள் நடைபெறுவது வழக்கம் .இந்நாளில் விஷ்ணு ,பரமசிவன் ,தேவி ஆகியோருக்கு விரத பூஜைகள் நடைபெறும். குறிப்பாக ஆலயங்களில் சத்யநாராயண பூஜை பௌர்ணமி நாட்களில் பிரபலமாக நடைபெறும்.

ஏப்ரல் மாத பௌர்ணமியில் இயற்கை அழகு அதிகமாக இருக்கும். ஆன்மீக சுழற்சி மற்றும் மனநிலையின் பரிபூரணத்திற்கும் இது சிறந்த நாள் என கருதப்படுகிறது. திருவண்ணாமலை கிரிவலம்: திருவண்ணாமலை கிரிவலம் தமிழ்நாடு திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலை சுற்றி நடந்து செல்லும் ஒரு பக்தி வழிபாட்டு முறை. இதனை கிரிவலப் பாதை அல்லது பிரதிக்ஷனை என்றும் கூறுவார்கள். கிரிவலம் செய்யும் பாதை சுமார் 14 கிலோ மீட்டர் அதாவது 8.6 மைல் நீளம். பிரத்யேகமாக இந்த நாள் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செய்கின்றனர். இதற்குப் பெரிய ஆன்மீக சக்தி உள்ளது.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் முக்கிய இடங்கள்:

கிரிவலப் பாதையில் அஷ்ட லிங்கங்கள் வழிபாடு செய்வது அதீத சிறப்பு. இந்திரலிங்கம், அக்னி லிங்கம் ,எமலிங்கம்,        நிரு திலிங்கம் ,வாருண்ய லிங்கம் ,வாயுலிங்கம் குபேர லிங்கம், ஈசானலிங்கம் .மேலும் உள்ள சிறப்பு ஸ்தலங்கள் ரமண மகரிஷி ஆசிரமம், ஸ்ரீ சிவானந்தா ஆசிரமம் ஆகும் .கிரிவலம் செய்வது தீய கர்ம வினைகள் நீங்கி மனத்தை சுத்தி செய்து இறைவனுடன் இடைவதற்கான ஒரு வழியாக கருதப்படுகிறது. திருவண்ணாமலை சுற்றி நடப்பதே சிவபெருமான நேரடியாக சேவிப்பதற்கு சமமாகும்.

வீடுகளில் இருப்பவர்கள் பூஜை அறையில் சிவபெருமானை நினைத்து "ஓம் நமசிவாய" என்னும் பாஞ்சராத்ர மந்திரம் கூறி வழிபடுவது சிறப்பு .அருகில் உள்ள ஆலயங்களுக்கு சென்று அபிஷேகப் பொருட்கள், மலர்கள் வாங்கிச் சென்று மனதார இறைவனை வேண்டுவது நன்மை பயக்கும். அனைவருக்கும் பௌர்ணமி வாழ்த்துக்கள். மேலும் ஆன்மீக தகவல்களுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன் .உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வரப் போகுது அக்னி நட்சத்திரம்.. கத்திரி வெயிலிலிருந்து தப்பிப்பது எப்படி?.. சில டிப்ஸ்!

news

கள்ளச்சாராய ஆட்சி கள்ளக்குறிச்சியே சாட்சி.. எடப்பாடி பழனிச்சாமி தாக்கு.. ஆர்.எஸ்.பாரதி ஹாட் பதிலடி!

news

கோவையை தொடர்ந்து.. மதுரையில் களைகட்ட உள்ள‌..தவெகவின் பூத் கமிட்டி மாநாடு..!

news

கனடாவில் மாயமான இந்திய மாணவி வன்ஷிகா மரணம்.. கடற்கரையில் மர்மமான முறையில் உடல் மீட்பு

news

பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட மல்லிகார்ஜுன் கார்கே கோரிக்கை

news

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல்.. ஜிப்லைனில் பயணித்தவரின் பரபரப்பு வீடியோ!

news

கனடாவில் லிபரல் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. கூட்டணி ஆட்சியமைக்கும்.. பிரதமர் கார்னி

news

பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. பயணிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.. காஷ்மீரில் 48 ரிசார்ட்டுகள் மூடல்

news

தமிழ்நாட்டில்.. இன்று வெயில் குறைந்து மழை பெய்யக்கூடும்.. தமிழ்நாடு வெதர்மேன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்