இருளை அகற்றும் குரு.. இன்று குரு பூர்ணிமா.. ஆசிரியர்களை வணங்கி ஆசி பெறுவோம்!

Jul 10, 2025,12:00 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


குரு பூர்ணிமா..  ஜூலை மாதம் பத்தாம் தேதி ஆனி 26 ஆம் நாள் முழு பௌர்ணமி நாளான இன்று "குரு பூர்ணிமா" கொண்டாடப்படுகிறது. 


"மாதா  பிதா  குரு  தெய்வம்" யாவரும் அறிந்ததே... "குரு பிரம்மா,  குரு  விஷ்ணு ,குரு தேவோ மகேஸ்வரா ;குரு சாக்ஷாத்  பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீ ஸ்ரீ குரவே நம"


"குரு "என்ற வார்த்தை இருளை அகற்றுபவர் என்று பொருள். அறியாமையை அகற்றி ஞானத்தை நோக்கிய பாதையை ஒவ்வொருவர் வாழ்விலும் ஒளிர செய்வதில் அவர்கள் வகிக்கும் பங்கை பெருமைப்படுத்தும் நாள் குரு பூர்ணிமா நன்னாளாகும்.


நேரம் :ஜூலை 10 வியாழக்கிழமை அதிகாலை 1 :36 முதல் ஜூலை 11 வெள்ளிக்கிழமை 2 :06 am வரை.  நம் வாழ்க்கையில் குருவை  கௌரவிக்கும் இந்த நாளை "வியாச பூஜை" என்றும்  கௌர விக்கின்றனர்.




"மகா குரு" என்று கருதப்படும் வேத வியாசரின்  ஆசியை பெறுவதற்கு "குரு பூர்ணிமா "தினம் மகிமையானது .அவரது ஆசிகள் இருளை அகற்றி அறிவின் ஒளியை கொண்டு வரும் என்பது நம்பிக்கை." மகா குரு"வை வணங்கி அவரது ஆசிரியரை பெற மந்திரங்கள், பக்தி பாடல்கள் ஓதப்படுகின்றன .தங்கள் குருகளுக்கு சீடர்கள் மரியாதை செய்து தக்ஷிணை செலுத்தி தங்களது படிப்பினை தொடர்வார்கள்.


இந்திய பாரம்பரிய இசைப் பள்ளிகளில் தங்களது இசைப்பள்ளி ஆசிரியர்களுக்கு (குருமார்களுக்கு) மரியாதை செலுத்துவர். இதனை "குரு சிஷ்ய பரம்பரா "என்று அழைக்கப்படுகிறது. குரு சிஷ்யருக்கு இடையில் புனிதமான பிணைப்பை வலுப்படுத்துகிறது இந்த நிகழ்வு.


சமண வரலாற்றின்படி இந்த நாளில் புத்த பூர்ணிமா அதாவது முழுமையான நிலவு நாளான இன்று  தன் முதல்  சீடரான கௌதம புத்தருக்கு குருவாக மாறிய பகவான் ஸ்ரீ மகாவீரரை போற்றுவதற்காக இந்த குரு பூர்ணிமா கொண்டாடப்படுகிறது.


புத்த மதத்தில் பௌத்தர்கள்" குருபூர்ணிமாவை "உ போ சதா" என்கிற சடங்கை மேற்கொள்கிறார்கள். புத்தருடைய எட்டு போதனைகளை மதிக்கிறார்கள். அவர்கள் துறவற பயிற்சிகளையும், தியான பயணத்தையும் தொடங்கும் நாளாக இந்த குரு பூர்ணிமா நாளை சிறப்பாக கருதுகின்றனர். புத்தர் இந்த நாளில் சாரநாத்தில் தனது சீடர்களுக்கு தனது முதல் பிரசங்கத்தை வழங்கியதாக கூறப்படுகிறது.


சிவபெருமானும் இந்த நாளில்தான் அவர் தனது ஞானத்தை  மக்களிடம் பகிர்ந்து  கொண்டார் என்று கூறப்படுகிறது. அவரை முதல் ஆசிரியர் ஆக்கிக் கொண்டு மக்களுக்கு ஞானமும், அருளாசிகளும்  வழங்கினார். சிவபெருமான் சப்தரிஷிகளுக்கு ஞானம் அளித்த நாளும் இந்த குரு பூர்ணிமா நாளே. 


மேலும் தன்னலமின்றி அறிவையும், ஞானத்தையும் வழங்கி அனைவர் வாழ்க்கையிலும் வழிகாட்டும் அனைத்து ஆசிரியர்களுக்கும் அவர்களுடைய பல்வேறு பாத்திரங்களில் நம் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றத்தையும் ,அவை ஏற்படுத்தும் தாக்கத்தையும் நினைவூட்டும் நாளாக செயல்படுகிறது. குரு பூர்ணிமாவின் முக்கிய சாராம்சம் என்னவென்றால் தனி நபர்களை அறியாமையில் இருந்து வெளிக்கொணர்ந்து நல்ல புரிதலுக்கு வழி நடத்தும் ஆசிரியர் பெருமக்களை கவுரவிப்பதாகும்.


இன்றைய நாட்களில் குரு பூர்ணிமா எப்படி? கொண்டாடப்படுகிறது என்றால்.... நாடு முழுதும் உள்ள பள்ளிகள் ,கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் தற்போதைய படிக்கும் மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள், தங்களுடைய ஆசிரியர்களை சந்தித்து நன்றி தெரிவித்து, அவர்களை கௌரவிக்கிறார்கள் .கதை, கவிதைகள் வாசிக்கப்படுகின்றன. ஆசிரியர்களும் அவர்களுடைய ஆசிகளை பல்வேறு துறைகளில் மின்னி கொண்டிருக்கும் தங்களது அறிவுரைகளையும் ஆசிகளையும் மாணவர்களுக்கு தெரிவிக்கும் நாள் இந்த புனிதமான "குரு பூர்ணிமா" நன்னாள்.


தென் தமிழ் சார்பாக அனைத்து ஆசிரியர்களுக்கும் எங்களது மனமார்ந்த "குரு பூர்ணிமா" நல்வாழ்த்துக்கள். மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .வரைந்து எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இனி அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது: டாக்டர் ராமதாஸ் போட்ட கண்டிஷன்!

news

புதுச்சேரி துணை நிலை ஆளுநருடன் மோதல்.. சமாதானமானார் முதல்வர் என். ரங்கசாமி!

news

மதுரையில் ரூ. 200 கோடி சொத்துவரி ஊழல்: சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

பிரகாஷ் ராஜ், ராணா, விஜய் தேவரகொண்டா.. 29 தெலுங்கு நடிகர், நடிகைகள் மீது வழக்கு

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

தமிழக வெற்றிக் கழகம் என்று படகுகளில் எழுதினால் மானியம் மறுப்பதா.. விஜய் கண்டனம்

news

அதிமுகவை மீட்க முடியாதவர் பழனிச்சாமி தமிழகத்தை மீட்பேன் என்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

எதிர்க்கட்சித் தலைவர் சங்கிகள்... எழுதிக் கொடுப்பதை அப்படியே வாசித்து வருகிறார்: அமைச்சர் சேகர்பாபு

news

புதுப் புது வரலாறு படைக்கக் காத்திருக்கும் சுப்மன் கில்.. 4 உலக சாதனைகளுக்கு ஆபத்து!

அதிகம் பார்க்கும் செய்திகள்