- ஸ்வர்ணலட்சுமி
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மூன்றாம் தேதி சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம். ஆங்கிலத்தில் -International Plastic Bag Free Day.
இந்த நாள் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை குறைப்பதும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை விவரிப்பதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாப்பது இதன் முக்கிய நோக்கமாகும். நாம் அனைவருக்கும் பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதனைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ,மக்கள் எதற்கு எடுத்தாலும் பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதை தடுக்கவும் ,ஒரு நல்ல உந்துதல் தரும் நாளாக இந்த "சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம்" கொண்டாடப்படுகிறது.
உலக அளவில் ட்ரில்லியன் கணக்கில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன. குழந்தைகள் ஸ்னாக்ஸ் முதல் காய்கறிகள், சத்துமாவு, பால் ,பழங்கள் ஆகியவை நெகிழி எனப்படும் கேரிபேக் பிளாஸ்டிக் பைகளினால் பேக் செய்து விநியோகம் செய்யப்படுகிறது.
இதனை கட்டுப்படுத்தும் வகையில் ,பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த எளிதானது தான் ஆனால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கின்றது .அவை மக்கி மண்ணோடு மண் ஆவதற்கு நீண்ட காலம் ஆகும் .அதனால் மண்ணிலும், கடல் நீரிலும் கலந்து இயற்கையையும் கடலில் வாழ்கின்ற உயிரினங்களையும் பெரிதும் பாதிக்கின்றன. ஆறுகளை மாசுபடுத்துகின்றன.
இதற்குப் பின்னால் சிறிய வரலாறு இருக்கின்றது. அது என்னவென்றால்... ஜூலை 3 ,2008 அன்று ஜீரோ வேஸ்ட் ஐரோப்பா ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பைகளின் பிரச்சினையை நிவர்த்தி செய்யும் நோக்கத்தில் ஒரு பிரச்சாரத்தை தொடங்கியது . அதன் பிறகு, 2015 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியம் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை குறைக்கும் நோக்கத்துடன் வழிகாட்டுதல்களை ஏற்றுக் கொண்டது .அதுவே காலப்போக்கில் இந்த இயக்கம் மிகுந்த உத்வேகத்தை பெற்று பல நாடுகள் பிளாஸ்டிக் பை தடைகளை அமல்படுத்தினர். இந்த நாள் பல நாடுகளால் அனைவராலும் அனுசரிக்கப்படும் ஒரு சர்வதேச கொண்டாட்டமாக வளர்ந்துள்ளது.
பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் தீமைகள்:
உடல்நல கேடுகள் விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகள் மனிதர்களாகிய நமக்கும் ,நம் சுற்றுச் சூழலுக்கும் அதிக தீமை விளைவிக்கும். சூரிய ஒளியில் வெளிப்படும் போது அவை தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களை வெளியிடுகின்றன. இதனால் மண் மற்றும் நீர் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. அவை உடைந்து போகும்போது அவை இன்னும் பிளாஸ்டிக் களாக மாறி விலங்குகள் மற்றும் மனிதர்களால் உணவில் கலந்து உட்கொள்ளப்படலாம். இதனால் உடல் நல கேடுகள் அதனால் ஏற்படும் அபாயங்கள் அளவிட முடியாதது.
சுற்றுச்சூழலில் ஏற்படும் விளைவுகள்:
பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தினால் நீண்ட காலம் நீடிக்கும் மாசுபாட்டையும், குப்பைகளையும் ஏற்படுத்துகின்றன. அப்புறப்படுத்த இயலாவிட்டால் நீர் ,நிலம் மற்றும் கடல் வாழ் உயிரினங்களுக்கு பெரும் தீங்கு விளைவிக்கின்றன. விலங்குகள் பெரும்பாலும் அவற்றை உணவாக தவறாக புரிந்து கொள்கின்றன அல்லது அவற்றில் சிக்கிக் கொண்டு மரணம் ஏற்படுகிறது .எனவே பல உயிரினங்கள் ஆடு, மாடுகள் ,நாய், மீன் ,ஆமை அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றன.
எப்படி பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை குறைக்கலாம்....?
பயோ பிளாஸ்டிக் பை பயன்பாட்டை அதிக படுத்துவது ,அதாவது பயோ பிளாஸ்டிக் பை என்பது தாவரங்களிலிருந்து இயற்கையாகவே தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருளாகும். இது எரிபொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் பாரம்பரிய பிளாஸ்டிக் பைகளை மாற்றும்.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய காகிதப் பைகளை உபயோகிக்கலாம். துணி பைகள் பயன்பாடு: பருத்தி பைகளை மார்க்கெட்டிற்கு காய்கறிகள் , பழங்கள் வாங்க பயன்படுத்துவது. அதனைத் துவைத்து மீண்டும் பயன்படுத்துவது மிகவும் எளிய விஷயமாகும்.
சணல் பைகள்: சணல் பைகள் இயற்கையாகவே மக்கும் தன்மை கொண்டவை எனவே சணல் பைகள் பயன்படுத்துவதை வழக்கமாகி கொள்ளலாம்.
ஒரு பிளாஸ்டிக் பை குப்பை கிடங்கில் மக்க ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன. இவை முழுமையாக உடைவதற்கு பதிலாக ஒளிச்சேர்க்கைக்கு ஆளாகின்றன. இதனால் விஷங்களை தக்க வைத்து சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் சிறிய பிளாஸ்டிக் துகள்களாக மாறுகின்றன. எனவே பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை குறைத்துக்கொண்டு மாற்று வழியினை பின்பற்றி நலமோடு வாழ்வோமாக. மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
தீபாவளிக் கொண்டாட்டம்.. பட்டாசு வெடித்து, பலகாரம் சாப்பிட்டு.. மழையுடன் கொண்டாடும் தமிழ்நாடு!
Deepavali Rush: தீபாவளிக்கு மட்டுமல்ல.. பொங்கலுக்கும் தொடரும்..ஏன் இந்த கூட்டம் நெரிசல்?
தீபாவளிக்கு இந்த ஊர்களில் எல்லாம் மழை இருக்காம்.. பட்டாசுகளைப் பார்த்து வெடிங்க மக்களே!
விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை
தீபாவளி ஸ்வீட்ஸ் மட்டும் போதுமா.. சூடான மொறுமொறு ஓமம் பக்கோடா செய்யலாமா!
தீபாவளி என்ற பெயர் வந்தது எப்படி.. பாதுகாப்பாக எப்படிக் கொண்டாடலாம்?
தீபாவளி தீபாவளி.. சூப்பரா காஜு கத்திலி செய்வோம்.. ஸ்வீட்டா பண்டிகையை கொண்டாடுவோம்
ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்
{{comments.comment}}