மகா சங்கடஹர சதுர்த்தி இன்று.. விசுவாசு வருடம் 20 25 ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி செவ்வாய்க்கிழமை- இன்று முழுமுதற் கடவுள் ஆன விநாயகரை வழிபடும் மகா சங்கடஹர சதுர்த்தி தினமும், கடைசி ஆடிச் செவ்வாய்க்கிழமை அம்பிகையை வழிபடவும், முருகப்பெருமானை வழிபடவும் சிறப்பான நாளாக அமைந்துள்ளது.
வருடத்தில் பன்னிரண்டு சங்கடஹர சதுர்த்திகள் வருகின்றன அதில் 12வதாக விநாயகர் சதுர்த்திக்கு முன்பாக வரும் சங்கடஹர சதுர்த்தியை மகா சங்கடஹர சதுர்த்தி என்று கொண்டாடுகிறோம் இன்றைய நாள் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் இந்த சிறப்பு வாய்ந்த மகா சங்கடஹர சதுர்த்தி அன்று நாம் விநாயகர் பெருமானை விரதம் இருந்து வழிபாடு செய்வதனால் 11 சங்கடஹர சதுர்த்தியும் நாம் வழிபாடு செய்த பலன் கிடைக்கும். இன்றைய நாள் இத்தனை சிறப்பு வாய்ந்தது .இந்த மகா சங்கடஹர சதுர்த்தி அங்காரக சங்கடஹர சதுர்த்தி என்றும் அழைக்கப்படுகிறது.
பிரணவத்தின் வடிவமே விநாயகர் இதன் திரிந்த வடிவமே "பிள்ளையார் சுழி." நம் எந்த ஒரு காரியத்தையும் முதலில் துவங்கும் பொழுது பிள்ளையார் சுழி போட்டு துவங்கினால் வெற்றி நிச்சயம் உண்டாகும், என்பது நம்பிக்கை.

வளர்பிறை சதுர்த்தியை வர சதுர்த்தி என்றும் கிருஷ்ணபட்ச தேய்பிறை சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என்றும் அழைக்கப்படுகிறது. முதன் முதலில் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை அங்காரகன் அனுஷ்டித்து நவகிரகங்களில் ஒன்றானார். எனவே ,இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்திற்கு "அங்காரக சதுர்த்தி" விரதம் என்றும் பெயர் வந்தது.
விநாயகர் காயத்ரி மந்திரம்:
"ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி பிரச்சோதயாத்"
ஓம் ஏக தந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி பிரச்சோதயாத்.
கணபதி சுலோகம்:
"அல்லல்போம் வல்வினைப்போம் அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம் போகா துயரம் போம் நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்தில் மேவும் கணபதியை கை தொழுத கால்"
மகா சங்கடஹர சதுர்த்தி ஆன இன்று விநாயகர் வழிபாடு செய்து அருகம்புல் மாலை, மோதகம் நைவேத்தியம் வைத்து மேல் காணும் ஸ்லோகங்களை படிக்க சங்கடங்கள் யாவும் நீக்கி சர்வஐஸ்வர்யங்களை அள்ளிக் கொடுப்பார் விநாயகர்.
மேலும் தென் தமிழ் வாசகர்கள் அனைவருக்கும்" மகா சங்கடஹர சதுர்த்தி" நாளான இன்று விநாயகர் பெருமானின் அருள் முழுமையாக கிடைக்க நல்வாழ்த்துக்கள். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}