சில நேரங்களில் கேள்விகளாய் .. சில நேரங்களில் ஆச்சரியமாய்... அரிய பெட்டகமாய் நீ.. நன்றி புத்தகமே!

Aug 12, 2024,01:10 PM IST

- காயத்ரி கிருஷாந்த்


இன்று தேசிய நூலக தினம்.. சொத்துக்கள் குவிந்து கிடந்தாலும், சொந்தங்கள் கூடிக் கிடந்தாலும், நண்பர்கள் நாலாபுறமும் இருந்தாலும், புத்தகம்தான் இறுதி வரை நமக்கான அறிவையும் ஞானத்தையம் வழங்கும்.. தேடிச் சேர்த்த பொருட்களை விட திரட்டி சேகரித்த படிப்பும், அதனால் கிடைக்கும் புத்தியும்தான் இறுதிவரை நமக்கு துணை நிற்கும்.. நம்மைக் காக்கும்.


அப்படிப்பட்ட வாசிப்பு விரும்பிகளுக்குரிய நாள் இன்று. நூல்கள் பல படிப்போம்.. அறிவைப் பட்டைத் தீட்டுவோம்.. ஞானத்துடன் வாழ்வோம்.. தேசிய நூலக தினத்தையொட்டி ஒரு கவிதை.




என் காலடிபட்டதும்

" அமைதி காக்கவும் "என்று எச்சரிக்கிறாய் 

ஆயிரம் வார்த்தைகளுடன் என்னை அணுகுகிறாய்...

வெளியே அழகாக தெரிகிறாய்...

சில நேரங்களில் முற்றுப்புள்ளியாய் 

சில நேரங்களில் கேள்விகளாய் 

சில நேரங்களில் ஆச்சரியமாய்...

அரிய பெட்டகமாக நீ 

எதில் தொலைகிறேனோ அதில் உன்னை காண்கிறேன் கண்கொட்டாமல் காணாமல் போகிறேன்...


இருப்பையும் மறைக்கிறேன்...

உன்னுள் உறைகிறேன் கையில் வைத்து கொண்டாடுகிறேன்... 

நேரங்கள் போகவே மனமின்றி திருப்பி வைக்கிறேன்...

வருத்தத்தோடு நான்...

இளைப்பாற நீ இருப்பதால் இந்த ஏழையும் பணக்காரன் தான்...

இறுமாப்பின்றி நீ இருக்கின்றாய் பல இதயங்களை கொள்ளை கொண்டாலும்...

சில நேரங்களில் இறுமாப்புடன்தான் இருக்கிறாய்... 

நானும் என்னை போல் யாவரும் உன்னை காண 

உன் வாசல் வருவோம் என்று...

கடமைப்பட்டவன் நான்... விருந்தாளியான எனக்கு எப்போதும் விருந்தை மறக்காமல் படைக்கின்றாய்...

உன்னை படைத்தவருக்கும் நன்றி

உனக்கும் நன்றி

நீ 

இருக்கும் கோயிலுக்கும் நன்றி...

நன்றி புத்தகமே....

போய் வருகிறேன்....

மீண்டும் வருவேன் புத்தகமே உன்னை காண மீண்டும் வருவேன்!


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்