நீ என்ன பெரிய பிஸ்தாவா அப்படின்னு கேட்காதீங்க.. அவ்வளவு மேட்டர் இருக்கு.. இன்று பிஸ்தா தினம்!

Feb 26, 2025,05:19 PM IST
- ஸ்வர்ணலட்சுமி

உலகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 26 ஆம் தேதி 'பிஸ்தா தினம்' கொண்டாடப்படுகிறது. இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் பிஸ்கட் கேக் ,ஐஸ்கிரீம் ,சாலட், ஜூஸ் ,மில்க் ஷேக் ஆகியவற்றில் பிஸ்தாவின் பயன்பாடு மிக அதிகம்.

இது ட்ரை நட் (Dry nut)பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பிஸ்தா தினம் (Pista day) கொண்டாடப்படுகிறது. முந்திரி குடும்பத்தைச் சேர்ந்த பிஸ்தா பெர்சியாவில் தோன்றிய ஒரு சிறிய முதல் நடுத்தர அளவிலான மரம் ஆகும். இது மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இருக்கிறது என்ற ஒரு கூற்று உண்டு .பிஸ்தா 1800 களில் அமெரிக்காவை நோக்கி சென்றன ,இருந்தாலும் 1900 களில் மட்டுமே பிரபலம் அடைந்தது.

பிஸ்தா பயன்பாட்டின் நன்மைகள்:



பிஸ்தாவில் லோ கிளைசிமிக் இன்டெக்ஸ் உள்ளது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்துள்ளது. புரதம் அதிகம் உள்ளது. அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. பிஸ்தாவில் மோனோ சாச்சுரேட்டட் மற்றும் பாலி அண்சாட்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. ரத்த நாளங்கள் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

கொழுப்பைக் குறைக்கும் எனவே எடை குறைப்புக்கு மிகவும் உதவுகிறது. பிஸ்தாவில் சக்திவாய்ந்த ஆக்சிஜனேற்றுகள் உள்ளன .அவை செல்கள் மற்றும் திசுக்களை ஆக்ஸிஜனேற்ற தீங்குகளில் இருந்து பாதுகாக்கிறது. நரம்பியல் பிரச்சனைகளின் அபாயத்தை குறைக்கின்றது. உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும் .இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான ஒரு சக்தி வாய்ந்த கொட்டை. பிஸ்தா ஆரோக்கியமான வாழ்விற்கு 'பிஸ்தா டே.' பிஸ்தாவிற்கு நாம் கொடுக்கும் அங்கீகாரம் ஆகும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது வழக்கு: தமிழக உரிமையை மீட்க திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி

news

திருச்சி தந்த அதிர்ச்சி!

news

பல்கலைக்கழக விவகாரம்... நிர்வாகமும், அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: அண்ணாமலை

news

தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை மையம் அலர்ட்!

news

இன்னும் கொஞ்சம் யோசித்தால்.. இயற்கையை நேசித்தால்!

news

பெற்று வளர்த்த தாய்மடி

news

மறைத்த அன்பு.. மலரின் வேரில் மறைந்த கதை.. மீண்டும் மங்கலம் (9)

news

சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை எதிர்த்து.. நவம்பர் 16ல் தவெக போராட்டம்?.. விஜய் வருவாரா??

news

ரயில் நிலையங்களில் இட்லி சரியில்லையா.. சாம்பார் டேஸ்ட்டா இல்லையா.. QR கோட் மூலம் புகார் தரலாம்

அதிகம் பார்க்கும் செய்திகள்