கருவறைக்கு அம்மா!
கல்வி அறைக்கு ஆசிரியர்!
கல்விக்கண் திறந்த கடவுள்கள் தினம்
கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் தினம்!
சுயநலம் பாராமல் பொதுநலம் பாராட்டி
உளி கொண்டு செதுக்காமல் மொழிகொண்டு செதுக்கும் சிற்பிகளாம்
ஆசிரியர்கள் தினமான இன்று ஆசிரியர்களுக்கு நன்றி சொல்ல
பயிற்றுவித்த ஆசிரியர்களை பட்டியலிட முனைந்தேன்!
முதலில் வந்து நின்றார் அம்மா!
பாசம் கொட்டிக் கொடுத்தவரே முதலில் பேசக் கற்றுக் கொடுத்தார்!
அடுத்து வந்து நின்றார் அப்பா!
வெளியுலகம் கற்றுக் கொடுத்தார்!
கற்றுக் கொள்ள வேண்டாதன பதமாய்க் கற்றுக் கொடுத்தார்!
அடுத்தடுத்து வந்தனர்
நட்புகள், உறவுகள்!
அனைவரிடமும் ஏதோ ஒன்று கற்றேன்!
ஒவ்வொருவரிடமும் பாடம் ஒன்று பெற்றேன்!
அடுத்து வந்தனர் பள்ளி முதலாய் கல்லூரி முடியும் வரை உள்ள ஆசிரியர்கள்!
கரும்பலகை தான்மெழுகி
அரிச்சுவடி கற்றுத்தந்த
முதல் வகுப்பு ஆசிரியர் நிற்கிறார் இன்றுவரை நெஞ்சத்தில் நிறம் மாறாப் பசுமையாய்!
தமிழ் என்னும் அமிர்தம் தன்னை
அன்புடன் அரவணைத்து ஊட்டிய அன்னையான எனது தமிழாசிரியர்,
ஆங்கில இலக்கியத்தை எனது ஆறறிவுக்குள்
அழகாய்ப் புகுத்திய
ஆங்கில ஆசிரியர்,
கடினமான கணக்குப் பாடத்தினைக் கனிவுடன் பயிற்றுவித்த கணித ஆசிரியர்,
சோதனைச் சாலையில் அமிலம் தந்த காயத்தால்
அரண்டு போய் நின்றபோது அன்பு செய்து அறிவியல் பாடத்தை ஆற்றலுடன் கற்றுத்தந்த அறிவியல் ஆசிரியர்,
வரலாற்று நிகழ்வுகளை மனதில் ஆழமாகப் பதியும்படி
பாங்குடன் பயிற்றுவித்த வரலாற்று ஆசிரியர்
ஆகியோர் நின்றனர்
பரிவின் திருவுருவாய்!
இவர்களுடன் தட்டிக் கொடுத்து மனதோடு ஒட்டி நின்ற கல்லூரி ஆசிரியர்கள் பட்டியலும் இதில் அடக்கம்!
இப்போது சந்திக்கும்
சக மனிதர்களிடமும்
கற்கின்றேன்
நிதம் பாடம்!
கற்றல் என்னும் துடுப்பினாலே
நல் திசை நோக்கியே நகர்கிறது
எனது வாழ்க்கை என்னும் ஓடம்!
சில ஆசிரியர்களை நினைக்கையில் எனது விழிகள் நனைத்திருப்பேன்!
கற்பித்த ஆசிரியர்கள்
அனைவரையும் என்றென்றும் நன்றியுடன் நினைத்திருப்பேன்
நான் இருக்கும் வரை!
அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்!
நன்றி!
கவிதை:
V.Rajeswari,
Assistant,
College Office,
The Madura College
(Autonomous),
Madurai -625 011.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!
அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை
IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!
துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!
பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு.. முதல் முறையாக.. தேமுதிக பொதுக்குழு கூட்டம்.. 30ம் தேதி!
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}