- ஸ்வர்ணலட்சுமி
விசுவாவசு வருடம் 20 25 ஜூன் 10ஆம் தேதி வைகாசி 27ஆம் நாள் செவ்வாய் கிழமையுடன் சேர்ந்து வரும் பௌர்ணமி நிறைந்த சிறப்பும் மகிமையும் மிகுந்தது
பௌர்ணமி நேரம்: ஜூன் 10ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பகல் 12: 27 மணிக்கு துவங்கி ஜூன் 11ஆம் தேதி பகல்0 1: 53 வரை பௌர்ணமி திதி உள்ளது .பௌர்ணமி வழிபாடு என்பது சந்திர உதயத்திற்கு பிறகு மாலையில் செய்வது சிறப்பு. அதனால் ஜூன் 10ஆம் தேதி பௌர்ணமி நாளாக சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. இன்று செவ்வாய்க்கிழமை பௌர்ணமி திதி அமைந்துள்ளதால் அம்பிகை வழிபாடும் முருகன் வழிபாடும் செய்வதற்கு உகந்த நாள்.
செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்குரிய வழிபாட்டு நாளாக கருதப்படுவதனால் செவ்வரளி மலர்கள் சாற்றி முருகன் வழிபாடும், துர்க்கை அம்மன் வழிபாடும் செய்ய சகல செல்வ வளங்களும், திருமண தடை உள்ளவர்கள் வழிபாடு செய்ய அவர்களது கோரிக்கைகள் நிறைவேறும் நாளாக அமைந்துள்ளது.

பௌர்ணமி தினமான இன்று குலதெய்வ வழிபாடு செய்யவும் சிவன் அம்பிகை முருகன் வழிபாடு செய்யவும் சிறப்பு வாய்ந்த நாளாகும். பௌர்ணமி தினத்தன்று வீடுகளில் சத்யநாராயண பூஜை செய்வதால், அவரவர் குடும்ப சூழ்நிலை பிரச்சனைகள் மாறும், வறுமை நிலை மாற்றம் பெற்று செல்வ வளம் பெருகி சுபிட்சம் உண்டாகும்.
மாதம் தோறும் வரும் பௌர்ணமி இந்திய கலாச்சாரம் மற்றும் இந்து மதத்தில் மிகவும் முக்கியமான நாளாக கருதப்படுவதால் சந்திரன் முழுமையாக ஒளிரும் இந்த நாளில் பல ஆன்மீக செயல்கள் தெய்வீக பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
பௌர்ணமி நாளில் தியானம் ,தானம், பூஜைகள் ,பிரார்த்தனை, முன்னோர்களுக்கு திதி கொடுத்தல் போன்ற நடைமுறைகளை மேற்கொள்வது நமது குடும்ப நலனும் நம் சந்ததியினர் வாழ்க்கையும் நன்றாக அமையும்.
வட சாவித்திரி விரதம்: வடநாட்டில் இருப்பவர்கள் இன்று கௌரி பூஜை செய்து மாங்கல்ய கயிறு கட்டிக் கொள்வார்கள். சாவித்திரி கதை படிப்பார்கள். மேலும் விஷ்ணு வழிபாடு செய்யவும் ,விஷ்ணுவிற்கு துளசி மாலைகள் சாற்றி, வெள்ளை மலர்களால் அலங்கரித்து பூஜை செய்வது சிறப்பு.
இந்த பௌர்ணமி நன்னாளில் புனித நதிகளில் நீராடுதல் குறிப்பாக கங்கா, யமுனா காவிரி நதிகளில் நீராடுதல் பாவங்களை போக்குகிறது என்று நம்பப்படுகிறது. சந்திரன் முழுமையாக பிரகாசிக்கும் இந்த பௌர்ணமி நாளில் மன அமைதி ,ஞானம் ,கவனம் போன்றவை அதிகரிக்கும். உளவியல் ரீதியாகவும் இந்த நாள் தியானம் செய்வது மன உறுதியை மேம்படுத்துகிறது.
மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
பிரதமரின் தமிழக வருகைக்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை முடிக்க அதிமுக தீவிரம்
நாகர்கோவில் மற்றும் போத்தனூரிலிருந்து அம்ரித் பாரத் ரயில்கள்!
தேமுதிக.,விற்கு விருத்தாச்சலம் தொகுதி ஒதுக்கீடு?: மீண்டும் ஒரு 'கேப்டன்' மேஜிக் நடக்குமா?
திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்
Tamil Nadu Assembly Elections 2026: "ஹீரோ"வை எப்போது களம் இறக்கப் போகிறது திமுக?
மனசைத் தொட்ட அந்த 5 ரூபாய் பரிசு!
ஆசிரியர்!
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
{{comments.comment}}