நாய் பூனை வளர்க்கிறீர்களா.. அப்படீன்னா இன்னிக்கு என்ன தினம்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க!

Feb 25, 2026,02:09 PM IST

- மயிலாடுதுறை வீ.யோகாஸ்ரீ 


மனிதர்களுக்கு சிறப்பான   தினம் கொண்டாடிய நாம் இன்று விலங்குகளின் சிறப்பு தினத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.


உலக ஸ்பே தினம் (World Spay Day) .. செல்லப்பிராணிகளின் இனப்பெருக்க கட்டுப்பாடு மற்றும் விலங்குகளின் நலன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முக்கிய தினமாக உலக ஸ்பே தினம் (Spay day)கொண்டாடப்படுகிறது . இந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த முயற்சியை Humane Society of the United States நிறுவனம் தொடங்கியது.


“Spay” என்பது பெண் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளின் இனப்பெருக்க உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றும் செயலாகும். இதன் மூலம் அவை இனப்பெருக்கம் செய்ய முடியாது. இதன் மூலம் தேவையற்ற குட்டி பிறப்புகளைத் தடுப்பது 




தெரு நாய்கள் மற்றும் பூனைகளின் எண்ணிக்கையை குறைப்பது என விலங்குகளின்  நலன் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு அளிப்பது இந்த தினத்தின் முக்கியத்துவம் ஆகும்.


உலகம் முழுவதும் விலங்கு பாதுகாப்பு அமைப்புகள் மூலம் நிகழ்ச்சிகள், முகாம்கள், இலவச சிகிச்சைகள் போன்றவற்றின் மூலம் கொண்டாடப்படுகிறது. ஒரு பெண் நாய் வருடத்திற்கு பல குட்டிகளைப் போடும். அந்த குட்டிகள் வளர்ந்து மீண்டும் இனப்பெருக்கம் செய்தால், தெரு விலங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.இதன் இனப்பெருக்கத்தை குறைப்பதால்  கருப்பை தொற்று (Pyometra),  குறைகிறது. மார்பக புற்றுநோய் அபாயம் குறைகிறது. மேலும் வாழ்க்கை தரம் மேம்படுகிறது. சில சமயங்களில் அதிக சத்தம், அலைந்து திரிதல் போன்ற பழக்கவழக்கங்கள் குறைகிறது.


இந்தியா போன்ற நாடுகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பல நகராட்சிகள் விலங்குகள் குடும்ப நலத் திட்டம் மூலம் ஸ்பே மற்றும் நியூட்டர் முகாம்களை நடத்துகின்றன. சென்னை போன்ற நகரங்களில் இலவச ஸ்பே முகாம்கள் மற்றும் விலங்கு மருத்துவமனைகள் மூலம் சேவைகள் பற்றிய விழிப்புணர்வு & பேரணிகள் இவை அனைத்தும் மனிதர்கள் மற்றும் விலங்குகள் இடையே நல்ல ஒற்றுமையை உருவாக்க உதவுகின்றன.


விலங்குகளும் உயிருள்ளவை. அவற்றை பாதுகாப்பது நமது கடமை  என்பதை உணர்ந்து தேவையற்ற இனப்பெருக்கத்தின் மூலம் சமூக பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்பதை உணர வேண்டும். 


நாம் அனைவரும் விலங்குகளை துன்புறுத்தாமல் பாதுகாப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)

news

டெல்லிக்கு ராஜான்னாலும் ஆச்சி சொல்லைத் தட்டாதே !

news

எட்டு எட்டா மனித வாழ்வை பிரிச்சுக்கோ - ஏன் பிரிச்சு வச்சிருக்காங்க தெரியுமா?

news

தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??

news

பிரியாணிக் காதல்!

news

வடகிழக்கு பருவமழை: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை

news

தென்தமிழ் தலையங்கம்: உயிருக்குக் குறி வைத்த ஒரு சொல்.. அனோஜன் கற்றுக் கொடுத்த பாடம்!

news

இந்தியாவை விட்டு வெளியேற பாலிவுட் நடிகர் இம்ரான் கானுக்கு உத்தரவு

news

Know about El Nino: அக்டோபர் அனலும் எல் நினோவும்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்