சென்னை: என்னையும், கெளரவ தலைவர் மணியையும் திட்டமிட்டு ஒரு கும்பல் அவதூறான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. பணம் கொடுத்து எங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.போற்றுவோர் போற்றட்டும். புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தைலாபுரத்தில் இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், வன்னியர் சங்க மகளிர் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த மாநாட்டில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டார்கள். இதனைக் கண்டு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் வருகின்ற 17ஆம் தேதி நடைபெற உள்ள பாமகவின்
சிறப்பு பொதுக் குழு கூட்டம் வரலாற்று சிறப்புமிக்க பொதுக்குழுவாகவும் இருக்கும். இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 49 மீனவர்களை உடனடியாக இலங்கை அரசு விடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில நெடுஞ்சாலைகளிலும் சுங்க கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்த உள்ளதாக தெரிகிறது. அப்படி செயல்படுத்தினால் பொதுமக்களுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அகழாய்வில் தமிழ்நாடு எப்போதுமே முன் மாதிரி மாநிலம் தான். கீழடி, பொற்கை, ஆதிச்சநல்லூர், கங்கை கொண்ட சோழபுரம் வரிசையில் புதுக்கோட்டை மாவட்டமும் இணைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
என்னையும், கெளரவ தலைவர் மணியையும் திட்டமிட்டு ஒரு கும்பல் அவதூறான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. பணம் கொடுத்து எங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.போற்றுவோர் போற்றட்டும்.புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும். என்னைப்பற்றி சொல்வற்கு என்ன இருக்கிறது. மக்களுக்கு பயன்படும் அரிசியாக நாங்கள் இருக்கிறோம். பதராக அவர்கள் இருக்கிறார்கள். பதர்களை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. அவர்களுக்கு மக்கள் உரிய பாடம் கற்பிப்பார்கள் என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}