அடடா... இன்றும் நகை விலை குறைவு: அதுவும் சவரனுக்கு ரூ.240 பாஸ்!

Oct 01, 2024,10:58 AM IST

சென்னை:  சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன்  ரூ.56,400க்கும், ஒரு கிராமின் விலை  ரூ.7,050க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 


கடந்த மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கம் விலை அதன் பின்னர் புதிய உச்சம் தொட்டது.இதனால் இனி வரும் நாட்களில் நகை விலை தொடர்ந்து உயர்ந்து வரும் என்று எண்ணிய வாடிக்கையாளர் கவலை அடைந்தனர். ஆனால், தற்போது நகை விலை தொடர்ந்து குறைந்து வருவது வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 28ம் தேதியில் குறைய தொடங்கிய தங்கம் இன்று வரை குறைந்துள்ளது.அதுவும்  அடுத்து தீபாவளி பண்டிகை வருவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  நகை விலை குறைந்துள்ளதால் நகை கடைகளை நோக்கி மக்கள் பயணிக்க தொடங்கியுள்ளனர்.


சென்னையில் இன்றைய தங்கம் விலை....




சென்னையில் இன்றைய தங்கம் விலையை பெருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.30 குறைந்து ரூ.7,050 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 


8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 56,400 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.70,500 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.7,05,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,691 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.61,528 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.76,910 ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,69,100க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,050க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,691க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22  கேரட் தங்கம் விலை ரூ.7,065க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,706க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,050க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,691க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,050க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,691க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,050க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,691க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,050க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,691க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,055க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,696க்கும் விற்கப்படுகிறது.


சென்னையில் இன்றைய வெள்ளி விலை....


1 கிராம் வெள்ளி விலை ரூ.101 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 808 ஆக உள்ளது.  

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,010 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,100 ஆக உள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,01,000 ஆக உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய் ஒரு சுனாமி.. தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பு.. திமுக கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

news

ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை நாளை வருமா.. முதல்வர் விஜய் விளக்கம்

news

Tasmac: 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்பனை செய்யக் கூடாது.. ஸ்ட்ரிக்ட் உத்தரவு

news

3 திருமணங்கள்.. எல்லாமே தோல்வி.. வாழ்க்கை முடிந்துவிடவில்லை.. மீரா வாசுதேவனின் புதிய தொடக்கம்

news

கேரளத்தின் புதிய முதலமைச்சராகிறார் வி.டி. சதீசன்.. காங்கிரஸ் அறிவிப்பு

news

கூட்டணிக் கட்சியினருக்கு மனத்தாங்கல் ஏற்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்.. மு.க.ஸ்டாலின்

news

எட்டி எட்டிப் பார்த்தான்.. எட்ட நின்று பார்த்தான்.. புடுச்சுப்போச்சு!

news

மணாளனின் மாண்புகள்!

news

Proverbs: அரைக் காசை ஆயிரம் பொன்னாக்கியவளும் பொண்டாட்டி..

அதிகம் பார்க்கும் செய்திகள்