சென்னை: தங்கம் வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.6780க்கும், சவரன் ரூ.54,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்தே உள்ளது.
கடந்த சில நாட்களாக குறைந்திருந்த தங்கம் நேற்று உயர்ந்திருந்த நிலையில் இன்றும் உயர்ந்துள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.80 மட்டும் உயர்ந்திருந்த தங்கம் இன்று கிராமிற்கு ரூ.80 உயர்ந்து, சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது. இந்த அதிரடியான விலை ஏற்றம் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை நிலையற்ற நிலையில் இருந்து வருகிறது. இந்த நிலையற்ற விலையினால் நகைப்பிரியர்கள் சற்று கலக்கம் அடைந்து வருகின்றனர்.இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் உயர்ந்தே உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு காரணமாக இந்த விலை ஏற்றம் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் இன்றைய தங்கம் விலை...
இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,780 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 80 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.640 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 54,240 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,397 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.59,176 ஆக உள்ளது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை...
தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையும் உயர்ந்தே உள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி ரூ. 1.40 காசுகள் உயர்ந்து ரூ.98.50 ஆக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 788 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று ரூ.97,100க்கு விற்கப்பட்டது, இன்று ரூ.98.500 விற்கப்படுகிறது. ஒரு கிலோவிற்கு இன்று மட்டும் ரூ.1,400 உயர்ந்துள்ளது.
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
உன்னையே கதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா!
{{comments.comment}}