தமிழ்நாட்டில் தேர்தல் எதிரொலி.. 34 டோல்கேட்களில் கட்டண உயர்வு.. தற்காலிகமாக நிறுத்திவைப்பு!

Apr 01, 2024,10:58 AM IST

சென்னை: லோக்சபா தேர்தலில் மக்கள் அதிருப்தி பின்விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்பதாலும், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஒரே குரலில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாலும், தமிழ்நாட்டில 34 டோல்கேட்டுகளில் இன்று முதல் அமல்படுத்தப்படவிருந்த சுங்கச்சாவடி கட்டண உயர்வை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. அனேகமாக ஏப்ரல் 19ம் தேதிக்குப் பிறகு இது அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது.


கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு முன்பு கட்டண உயர்வைக் கைவிடுமாறு பல்வேறு அரசியல் கட்சிகள், லாரி உரிமையாளர் சங்கங்கள் உள்ளிட்டவை கோரிக்கை விடுத்தும் கூட, அப்படியெல்லாம் இதை நிறுத்தி வைக்க முடியாது, டெக்னிக்கலாக ஏப்ரல் 1ம் தேதியன்று கட்டணத்தை உயர்த்தியாக வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.




முன்னதாக நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மொத்தம் 63 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. இதில் 34  சுங்க சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 


தமிழ்நாட்டில் உள்ள 36 டோல்கேட்டுகளில் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதலும், மற்ற டோல்கேட்டுகளில் செப்டம்பர் 1ம் தேதி முதலும் கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் இந்தாண்டிற்கான கட்டண உயர்வு ஏப்ரல் 1 நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  அதன்படி, 34  சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  குறைந்தபட்சம் 5 ரூபாயில் இருந்து 20 ரூபாய் வரை கட்டண உயர்வு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒரு வழி பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணம் ஆகியவற்றிற்கான கட்டணம் 5 ரூபாய் முதல் 30 ரூபாய் வரையிலும், மாதாந்திர கட்டணம் 100 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரையும் உயரும் எனவும் கூறப்பட்டது.


சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்த்தப்படுவது குறித்து வாகன உரிமையாளர்கள், வாகன ஓட்டுனர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்து வந்தது. தமிழக முதல்வர் ஸ்டாலினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவு அனைத்து திட்ட இயக்குனர்களுக்கும் கடிதம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை ஏற்கனவே உள்ள கட்டணமே வசூலிக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம்  தேர்தல் முடிந்த பிறகு ஜூன் மாதத்தில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!

news

சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!

news

யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!

news

Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே

news

பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!

news

Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு

news

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!

news

அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!

news

கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்