தமிழ்நாட்டில் உள்ள .. ஐந்து டோல்கேட்டுகளில் .. வரும் ஏப்ரல் 1 முதல் அதிரடி கட்டண உயர்வு..!

Mar 23, 2024,12:21 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 5 டோல்கேட்டுகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.


 ஒருமுறை பயணம் செய்து ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூபாய் 5 முதல் 20 ஆகவும், மாதாந்திர பாஸ் கட்டணம் ரூபாய் 100 முதல் 400 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது வரும் ஏப்ரல் ஒன்று முதல் அமலுக்கு வர இருக்கிறது.




தமிழக நெடுஞ்சாலைகளில் மொத்தம் 50 டோல்கேட்கள் உள்ளன. இங்கு கார், வேன், கனரக வாகனம் உள்ளிட்டவைக்கு தனித்தனியான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் பராமரிப்பு பணிக்காக ஆண்டுக்கு இருமுறை கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். 


இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரியலூர் டூ மானகெதி, திருச்சி டூ கல்லக்குடி, வேலூர் டூ வல்லம், திருவண்ணாமலை டூ இனம்கரியாந்தல், விழுப்புரம் டூ தென்னமாதேவி, ஆகிய ஐந்து டோல்கேட்டுகளில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. 


இதில் ஒரு நாளைக்கு ஒரு முறை பயணம் செய்து திரும்பி வருவதற்கான கட்டணம் ரூபாய் ஐந்து முதல் 20 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மாதாந்திர பாஸ் கட்டணம் ரூபாய் 100 முதல் 400 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

அமைச்சர் உறுதிமொழியை ஏற்று.. இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

news

யாரையும் ஜெயிக்க வைக்க நான் வரலை.. நான் ஜெயிக்க வந்திருக்கேன்.. விஜய் அதிரடி

news

ஆசிரியர்களை பழி வாங்குவது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு தான் காரணம்: அண்ணாமலை

news

கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேட்டி

news

வெள்ளி விலை ஒரே நாளில் இருமுறை வீழ்ச்சி: என்ன நடந்தது?

news

தங்கம் விலை நேற்றைய விலையைத் தொடர்ந்து இன்றும் குறைவு... எவ்வளவு குறைவு தெரியுமா?

news

பாமக வேட்பாளர் நேர்காணல் தொடக்கம்...கட்சிப் பிளவுக்கு மத்தியில் ராமதாஸ் அதிரடி

news

கர்நாடகாவின் பிரபலமான ரியல் எஸ்டேட் அதிபர் சி.ஜே. ராய் எடுத்த விபரீத முடிவு!

news

மத்திய பட்ஜெட் 2026: எந்தெந்த பொருட்களின் விலை குறையும், எவற்றில் விலை அதிகரிக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்