சரசரன்னு ஏறி.. சரக்குன்னு இறங்கிய தக்காளி விலை.. மக்கள் ஹேப்பி அண்ணாச்சி!

Aug 16, 2023,01:36 PM IST
சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தக்காளி விலை ஏறுமுகமாக இருந்து வந்த நிலையில், தற்போது தக்காளி விலை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மக்கள் மன நிம்மதி அடைந்துள்ளனர்.

சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் ஆயிரம் மொத்த கடைகளும் , 2000 சில்லறை கடைகளும் காய்கறிகள் மற்றும் பழங்களை கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகின்றன. இது மிகப்பெரிய சந்தை ஆகும். 



கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த சில மாதங்களாக தக்காளி விலை கிடுகிடுவென அதிகரித்து வந்தது. கடந்த ஜூன் மாதம் இறுதியில் தக்காளி விலை ரூ. 150 என்ற உச்சத்தைத் தொட்டது. இதனால் சில்லறை விற்பனையிலும் தக்காளி விலை கிடுகிடுவென அதிகரித்து மக்களை அயர வைத்தது. தக்காளி சட்னியே கிடையாது என்று வீடுகளில் போர்டு வைக்காத குறையாக இல்லத்தரசிகள் தக்காளியை தூர வைக்க ஆரம்பித்தனர்.

சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதுமே தக்காளி விலை உயர்ந்தபடியேதான் இருந்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக குறையத் தொடங்கியுள்ளது. சென்னையிலும், பிற ஊர்களிலும் தக்காளி விலை கடுமையாக சரிந்து வருகிறது. 

நேற்று முன்தினம் தக்காளி விலை கிலோ ரூ. 50 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது .ஆனால் இன்று பத்து ரூபாய் குறைந்து கிலோ ரூபாய் நாற்பதுக்கு விற்பனை செய்யப்படுகிறது . தக்காளி விலையின் மாற்றத்தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை மேலும் குறைய வாய்ப்பிருப்பதாக கோயம்பேடு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொத்த மார்க்கெட்டில் விலை குறைந்தாலும் கூட சில்லறைக் கடைகளில் விலையைக் குறைக்காமலேயே வியாபாரிகள் விற்பதால் மக்கள் முழு மகிழ்ச்சியை அனுபவிக்க முடியவில்லை. பெரும்பாலான புறநகர்க் கடைகளில் கிலோ தக்காளி ரூ. 90 வரை விற்கப்படுவதால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர். கோயம்பேட்டிலிருந்து மிஞ்சிப் போனால் 30 கிலோமீட்டருக்குள் சென்னை புறநகர்கள் முடிந்து விடும். அப்படி இருக்கும்போது குறைந்தது 40 ரூபாய் வரை அதிகம் விற்பனையாவது ஏன் என்பது மக்களின் கேள்வியாக உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் தொடரும் மழை... இன்றும் 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு... வானிலை மையம்!

news

உருவானது வெர்டிஸ் நாடு.. 20 வயது இளைஞரின் அதிரடி.. ஆனால் இது கைலாசா மாதிரி கிடையாது!

news

கொள்ளிடத்தில்..தரமற்ற தடுப்பணையால் தத்தளிக்கும் விவசாயிகள்: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

news

தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

news

சாமியார் வேடத்தில் மனைவியைத் தேடி வந்த கணவர்.. அடுத்து நடந்த அதிரடி.. அடக் கொடுமையே!

news

நான் உழைத்து உருவாக்கிய கட்சியை கொடுத்து விட்டு டம்மியாக இருக்க முடியாது: டாக்டர் ராமதாஸ்!

news

இலங்கை படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்

news

வரலட்சுமி விரதம் 2025.. லட்சுமி தேவியை வீட்டிற்கு அழைத்து பூஜை செய்து விரதம் இருப்போம்!

news

புதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரன் ரூ.75,000 கடந்தது

அதிகம் பார்க்கும் செய்திகள்