சென்னை: சென்னையில் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால், அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் பயிற்சி வகுப்புகள் இருப்பதனால் சென்னை மாவட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
கன மழை எச்சரிக்கையும், பல இடங்களில் பள்ளிகளில் தண்ணீர் தேங்கியிருப்பதாலும் கூட நாளை விடுமுறை விடப்பட ஒரு காரணமாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் பெய்த கனமழை நாளை மறுதினம் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. டிசம்பர் நான்காம் தேதி சென்னைக்கு ஆந்திராவில் மசூலிப்பட்டினத்திற்கு இடையே புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மழைக்காக இல்லாமல் , ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்காக நாளை லீவு கிடைத்துள்ளதால், சென்னை மாவட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் குஷியாகியுள்ளனர். அடுத்து திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் புயல் காரணமாகவும் லீவு கிடைக்கு வாய்ப்பிருப்பதாக மாணவர்கள் அடுத்தடுத்த விடுமுறைகளுக்கும் ஆவலுடன் காத்துள்ளனர்.
நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
துளசி.. திருமாலுக்கு உகந்தது.. ஏன் என்று தெரியுமா?
இட்லி கடை படத்தின் டிரெய்லர் வெளியீடு தேதியை அறிவித்த படக்குழு
பீகாரில் மட்டுமல்ல கர்நாடகாவிலும் ஓட்டு திருட்டு : ராகுல் காந்தி போட்ட ஹைட்ரஜன் குண்டு
ரெஸ்ட் ரூம் போனால் கூட இனி சொல்லிட்டுத்தான் போகணும் போல.. எடப்பாடி பழனிச்சாமி கோபம்
தங்கம் விலை நேற்று மட்டுமில்லங்க இன்றும் குறைவு தான்... அதுவும் சவரன் ரூ. 400 குறைவு!
கேரளாவில் பரவும் மூளையை உண்ணும் அமீபா நோய்.. எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
பீகார் சட்டசபைத் தேர்தல்.. கலர் போட்டோ, கொட்டை எழுத்துகளில் புதிய EVM.. கலகலக்கும் களம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 18, 2025... இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும்
{{comments.comment}}