சென்னை: பொங்கல் பண்டிகை முடிந்து மக்கள் சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கும் நிலையில் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கடந்த 14, 15, 16 ஆகிய தேதிகளில் மக்கள் மிகச் சிறப்பாக கொண்டாடினர். பொதுவாக பொங்கல் பண்டிகை முன்னிட்டு மூன்று நாட்கள் மட்டுமே தொடர் விடுமுறை விடப்படும். ஆனால் இந்த வருடம் தொடர்ந்து ஆறு முதல் ஒன்பது நாட்கள் வரை தொடர் விடுமுறை கிடைத்தது. இதனால் சென்னையிலிருந்து பிற பகுதிகளுக்கு மக்கள் சுற்றுலா தளங்களுக்கும், சொந்த ஊர்களுக்கும் புறப்பட்டுச் சென்றனர். இதற்காக பேருந்து மற்றும் பஸ் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தி வெளியூர்களுக்கு சென்றனர். மக்கள் பெருமளவில் சொந்த ஊர்களுக்குப் போனதால் சென்னை கிட்டத்தட்ட வெறிச்சோடிக் காணப்பட்டது.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை நாட்கள் முடிந்து வரும் 20ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மீண்டும் செயல்பட உள்ளது. இதனால் சொந்த ஊர்கள் மற்றும் வெளியூர்களுக்கு சுற்றுலா பயணம் செய்தவர்கள் மீண்டும் சென்னைக்கு திரும்ப தொடங்கிவிட்டனர். இதனால் சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.குறிப்பாக பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதன் காரணமாக தாம்பரம், வண்டலூர் பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.

இந்த நிலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க பொங்கல் பண்டிகை முடிந்து சென்னைக்கு திரும்பும் மக்களுக்கு போக்குவரத்து காவல்துறையை வேண்டுகோள் விடுத்துள்ளது.
- சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள் பரனூர் சந்திப்பில் திரும்பி சர்வீஸ் சாலையை பயன்படுத்தி ஸ்ரீபெரும்புதூர் வழியாக பயணிக்க வேண்டும்.
- வாகனங்கள் எஸ்பி கோவில் ஓரக்கடம் சந்திப்பில் திரும்பி, ஓரகடம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக செல்ல வேண்டும்.
- திருப்போரூர் வழியாக வரும் கனரக வாகனங்கள் டாக்டர் அம்பேத்கர் சிலையில் திரும்பி செங்கல்பட்டு வழியாக பயணிக்க வேண்டும்.
ஜிஎஸ்டி ரோடு, வண்டலூர், கேளம்பாக்கம் சாலை, ஓஎம்ஆர் சாலை, இசிஆர் சாலைகளில் கனரக வாகனங்களுக்கு இன்று பிற்பகல் 2 மணி முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
- பல்லாவரம் புதிய பாலத்தில் இன்று பகல் 2 மணி முதல் திங்கட்கிழமை பகல் 12 மணி வரை சென்னை நோக்கி ஒரு வழி போக்குவரத்தாக தேவைக்கு ஏற்ப மாற்றப்படும்.
- ஜி எஸ் டி சாலையில் போக்குவரத்தை விரைவுப்படுத்த ஆம்னி பேருந்துகள் வெளிவட்ட சாலை வழியாக திருப்பி அனுப்பப்படும். சிரமம் இன்றி மக்கள் சென்னைக்கு திரும்ப ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
சிறப்புப் பேருந்துகள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 10 ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை 4 நாட்கள் சென்னையில் இருந்து தினசரி இயங்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 7,498 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 15 ஆயிரத்து 866 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் 8.73 லட்சம் மக்கள் பயணம் செய்து தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த நிலையில் தற்போது பொங்கல் பண்டிகை முடிந்து மீண்டும் சென்னைக்கு மக்கள் திரும்பத் தொடங்கி விட்டனர். இதனால் பயணிகளின் வசதிக்காக ஜனவரி 15 முதல் ஜனவரி 19 ஆம் தேதி வரை, சென்னைக்கு தினசரி இயங்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,290 சிறப்பு பேருந்துகள், பிற ஊர்களிலிருந்து 6,926 பேருந்துகள் என மொத்தம் 22,676 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
அதேபோல் கிளாம்பாக்கத்தில் இருந்து 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தினசரி இயக்கப்படும் சிட்டிப் பஸ்களை விட கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் இருபதாம் தேதி திங்கட்கிழமை காலை பயணிகளின் வருகையை கருத்தில் கொண்டு கூடுதலாக 500 பேருந்துகள் இயக்க இருப்பதாகவும் சென்னை போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஜனநாயகன் வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றத்தையே அணுக உச்சநீதிமன்றம் உத்தரவு
பொங்கல் மட்டுமல்ல இன்று.. இன்னொரு நாளும் இன்று கொண்டாடப்படுகிறது.. அது என்ன?
இந்தியாவை எஃகு கோட்டையாக்கி .. எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம் ஆகி!
வழிந்தோடும் பொங்கலுடன் இணையும் அனைத்து நற்பலன்கள்!
பொங்கலோ பொங்கல் என்றுரத்துக் கூவிட.. கிண்டிடக் கிண்டிடக்.. குலவையிட்டு!
மங்கலத் தை மலர்ந்த நாள் பொங்கல் வைத்து எங்கும் இன்பம்!
தை மாதம் பிறந்தது பொங்கலோ பொங்கல் .. பொங்கலோ பொங்கல் !
வைகைத் துயில் கலைந்து வாசலில் போட்ட கோலங்கள்!
வருக வருக.. தை மகளே வருக..!
{{comments.comment}}