சென்னை : பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிகள் துவங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே முடிந்து போனதால் வரிசையில் ஆவலாக காத்திருந்த பயணிகள் பலரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்னதாகவே ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்து வைக்கும் முறையை இந்திய ரயில்வே அறிமுகம் செய்தது. தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட்கள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு விட்ட நிலையில், தற்போது ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதி செவ்வாய்கிழமை வருகிறது. ஜனவரி 15ம் தேதி மாட்டுப் பொங்கலும், ஜனவரி 16ம் தேதி காணும் பொங்கலும் வருகிறது. ஜனவரி 13ம் தேதி திங்கட்கிழமை போகி பண்டிகை என்பதால், அதற்கு முன் ஜனவரி 11ம் தேதி முதலே விடுமுறை துவங்கி விடும். கிட்டதட்ட ஒரு வாரம் முழுவதும் தொடர் விடுமுறை வருகிறது. இதனால் ஜனவரி 10ம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்காக செப்டம்பர் 12ம் தேதியான இன்று காலை 8 மணிக்கு டிக்கெட் முன்பதிவுகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டது.
இதனால் பலரும் ஜனவரி 10ம் தேதி வெள்ளிக்கிழமையே சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி, டிக்கெட் முன்பதிவுக்கு தயாராக இருந்தனர். ஆனால் டிக்கெட் முன்பதிவு துவங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே டிக்கெட் முன்பதிவுகள் அனைத்தும் முடிவடைந்து, காத்திருப்போர் பட்டியலுக்கு சென்றனர். இதனால் பலரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
ஜனவரி 11ம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 13ம் தேதியான நாளை நடைபெற உள்ளது. அதிலும் இதே நிலை இருந்தால் என்ன செய்வது என தெரியாமல் பயணிகள் கலக்கம் அடைந்துள்ளனர். எந்த நாளிலும் ரயிலில் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால், தட்கல், சிறப்பு ரயில், சிறப்பு பஸ்கள் ஆகியவற்றை நம்பி தான் ஊர்களுக்கு செல்ல பிளான் போட வேண்டிய நிலையிலேயே பயணிகள் உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கப் போகிறீர்களா.. கமல்ஹாசனே சொன்ன ஹேப்பி நியூஸ்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 08, 2025... நல்ல காலம் பிறக்குது
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
{{comments.comment}}