சென்னை: லிப்ஸ்டிக் பூசியதற்காக சென்னை மாநகராட்சி மேயரின் பெண் தபேதார் மாதவி பணியிட மாற்றம் செய்திருப்பதாக தகவல் பரவிய நிலையில், அதை மறுத்து சென்னை மேயர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
டபேதார் மாதவி பணியை சரிவர செய்யாத காரணத்தினாலும், அலட்சியமாக இருந்ததாலும்தான் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் என்ற பெருமை பெற்றவர் பிரியா. மாநகராட்சித் தேர்தலில் 74வது வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்றார். 29 வயதில் பிரியா சென்னை மாநகராட்சியில் மேயராக நியமிக்கப்பட்டார். ஆரம்பத்தில் இவரை கேலி செய்தவர்கள் கூட மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவுக்கு சுறுசுறுப்பாக செயல்பட்டு கலக்கி வருகிறார்.
குறிப்பாக கொரோனா மற்றும் மழை வெள்ள காலங்களில் இரவு பகல் பாராது பணி செய்து மக்கள் ஆதரவைப் பெற்றார். எறும்பு போல சுறுசுறுப்பாக இவர் செயல்படுவதால் திமுகவினர் மத்தியில் மட்டுமல்லாமல் இவரை விமர்சிப்பவர்கள் மத்தியிலும் கூட தனி மரியாதையுடன் வலம் வருகிறார் மேயர் பிரியா.
இந்த நிலையில் முதல் முறையாக ஒரு சர்ச்சை மேயர் பிரியாவைச் சுற்றி வருகிறது. மேயராக பிரியா தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவரது உதவியாளராக அதாவது தபேதாராக, மாதவி நியமிக்கப்பட்டார். இவர்தான் சென்னையின் முதல் பெண் தபேதார். மேயருக்கு முன்னே செங்கோலை ஏந்தியும் கூட்ட நெரிசல் இல்லாமல் வழி ஏற்படுத்தி தருவதும் தபேதாரின் பணி. இந்த பணியை செய்து வந்த மாதவி திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு ஒரு சர்ச்சையான காரணம் கூறப்பட்டது. அதாவது மாதவி லிப்ஸ்டிக் போடும் பழக்கம் உள்ளவராம். அதுவும் பளிச்சென தெரியும்படி அடர்த்தியாக லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டுதான் வருவாராம். ஆனால் இப்படி லிப்ஸ்டிக் போடக் கூடாது என்று அவருக்கு அறிவுரை வழங்கப்பட்டதாம். ஆனால், இது போன்ற அறிவுரைகள் மனித உரிமைக்கு எதிரானது என்றும், லிப்ஸ்டிக் போடக்கூடாது என அரசாங்க உத்தரவு எதுவும் இல்லை என மாதவி தரப்பில் பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து மாதவி மணலிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்திருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து, இது விமர்சனத்தைக் கிளப்பியது.
இந்த நிலையில் இதுகுறித்து மேயர் அலுவலகத் தரப்பில் வெளியாகியுள்ள விளக்கத்தில், சரிவர பணியைக் கவனிக்காத காரணத்தாலும், பணியில் அலட்சியம் காட்டியதாலும்தான் மாதவி இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், மற்றபடி அவர் லிப்ஸ்டிக் போட்டு வந்ததற்காக இடமாற்றம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி
தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
{{comments.comment}}