சார் பேரு.. கலைப்புலி ராஜா.. நண்பனையே போட்டுத் தள்ளியவர்.. சுட்டுப் பிடித்த திருச்சி போலீஸ்!

Jul 05, 2024,03:34 PM IST

திருச்சி:   திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே பிரபல ரவுடி கலைப்புலி ராஜாவை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே பிரபல ரவுடி கலைப்புலி ராஜாவை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது அந்த ரவுடி தப்பிக்க முயன்று ஓடினார்.  அவரை போலீசார் பின் தொடரவே மணச்சநல்லூர் அருகே துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு  வழக்குகள் நிலுவையில் உள்ளன.




போலீசார் சுட்டதில் ரவுடி கலைப்புலி ராஜாவுக்கு காலில் குண்டுக் காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இந்த கலைப்புலி ராஜா பயங்கரமான ரவுடியாம். சமீபத்தில் இவரது நண்பரான நவீன் குமார் என்பவரை தனது ஆட்களோடு சேர்ந்து சரமாரியாக வெட்டிக் கொன்றவர். லால்குடி அருகே மதுக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறி கொலையில் முடிந்தது.  


ராஜாவும், நவீன்குமாரும் நீண்ட கால நண்பர்களாம். ஆனால் சில பிரச்சினைகளால் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் இருந்தது. கடைசியில் இது நவீன்குமாரின் கொலையில் போய் முடிந்தது. இந்தக் கொலை வழக்கில்தான் ராஜாவை போலீஸார் தேடி வந்தனர். ஏற்கனவே அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தப் பின்னணியில்தான் ராஜாவை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துக் கைது செய்துள்ளனர் போலீஸார்.

சமீபத்திய செய்திகள்

news

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!

news

பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?

news

இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )

news

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்

news

ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்

அதிகம் பார்க்கும் செய்திகள்