சென்னை: நடிகை திரிஷா வளர்த்து வந்த நாய் ஜோரோ இறந்து போய் விட்டது. இதனால் பெரும் வேதனை அடைந்துள்ளார் திரிஷா. தனது மகன் இறந்து விட்டதாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
செல்லப் பிராணிகளிடம் மிகுந்த அன்பு செலுத்தக் கூடியவர் நடிகை திரிஷா. அவர் நாய் உள்ளிட்டவற்றை வளர்த்து வருகிறார். அவருக்கு மிகவும் பிடித்தமான நாய்தான் இந்த ஜோரோ. அதை நாய் என்றே கூற மாட்டார். தனது மகன் என்றுதான் எல்லோரிடமும் சொல்வார். அந்த அளவுக்கு பாசத்தையும், அன்பையும் கலந்து அதை வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை ஜோரோ இறந்து விட்டது. இதனால் திரிஷா பெரும் வேதனை அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், எனது மகன் ஜோரோ, கிறிஸ்துமஸ் நாளின் காலையில் மரணமடைந்து விட்டான். என்னைத் தெரிந்த எல்லோருக்குமே தெரியும், எனது உலகமே ஜோரோதான் என்று. அவன் இல்லாத உலகில் எனது வாழ்க்கையே அர்த்தமற்றதாகி விட்டது. நானும் எனது குடும்பத்தினரும் மனம் உடைந்து போயுள்ளோம். எனது வழக்கமான பணிகளில் சிறிது காலம் கழித்து நான் இணைகிறேன் என்று கூறியுள்ளார் திரிஷா.
நடிகை திரிஷாவுக்கு தற்போது 41 வயதாகிறது. அஜீத்துடன் விடாமுயற்சி படத்தில் அவர் நடித்து வருகிறார். அதேபோல குட் பேட் அக்லி படத்திலும் திரிஷா இணைந்துள்ளார். அதேபோல சூர்யாவுடனும் அடுத்து நடிக்கவுள்ளார். மலையாளத்திலும் டொவினோ தாமஸுடன் இணையப் போகிறார். கமல்ஹாசனுடன் தக்லைப் படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கில் விரைவில் சிரஞ்சீவியுடன் ஒரு படத்திலும் திரிஷா நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2012ம் ஆண்டு முதல் ஜோரோ அவரது வீட்டில் வளர்ந்து வந்தது. மிக நீண்ட காலம் திரிஷாவுடன் ஜோரோ இணைந்திருந்ததால் அதன் பிரிவை திரிஷாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மறைந்த ஜோரோவின் உடல், திரிஷா வீட்டு வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஜோரோவை இழந்து வாடும் திரிஷாவுக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கல்களும் ஆறுதலும் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
படத்தில் வில்லன்...நிஜத்தில் ஹீரோ...வெள்ளம் பாதித்த மக்களுக்காக ஓடி வந்த சோனு சூட்
வெனிசுலா விவகாரம்...டிரம்ப்க்கு அமெரிக்க கோர்ட் கொடுத்த அடுத்த குட்டு
அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்: ஏ.ஆர். ரகுமான்
மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை.. மழைநீரும் வடிந்த பாடில்லை.. எடப்பாடி பழனிச்சாமி
உட்கட்சி பூசல்களை சரி செய்க...தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை
விராட் கோலிக்கு லண்டனில் உடல் தகுதி தேர்வு நடத்த அனுமதி
பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவிப்பு
திருமண நிகழ்வுகள், வேலைகள் இருப்பதால் செல்லவில்லை... டெல்லி செல்லாதது குறித்து அண்ணாமலை விளக்கம்!
அன்புமணிக்கு செப்.,10 ம் தேதி வரை மீண்டும் அவகாசம் : டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
{{comments.comment}}