உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் ஆம்னி பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில், சம்பவ இடத்திலேயே 2 பலியாயினர். 20 மேற்பட்டவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை உளுந்தூர்பேட்டையில் அதிகாலையில் கோர விபத்து ஏற்பட்டது. சென்னையில் இருந்து ஆம்னி பேருந்து அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்தது. உளுந்தூர்பேட்டை அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சென்டர் மீடியனில் மோதி, எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இரு வாகனங்களும் உருக்குலைந்தன. விபத்தில் லாரி மற்றும் ஆம்னி பேருந்து டிரைவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தனர். 20 மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்து தீவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து ஏற்பட்டது.இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் ரவுண்டில் பாதிகூட்டணியை காணோம்..2வதில் டிரைவர் கூட இருப்பாரானு தெரியலை: உதயநிதி ஸ்டாலின்!
26 ஆண்டுக்குப் பின் மணந்த "ரோஜா".. மிரட்டிய சத்தியன் மகாலிங்கம்.. இன்னொரு ரவுண்டு வாங்க பாஸ்!
ரஸ்தாளி வாழைப்பழம்.. ஊட்டச்சத்து நிறைந்த ராயல் பழம்.. டெய்லி சாப்பிடுங்க.. ஹெல்த்தியா இருங்க!
திருச்சி சுற்றுப் பயணம்.. தவெக தலைவர் விஜய்க்கு போலீஸ் விதித்த 23 நிபந்தனைகள்!
செப்டம்பரில் 12ல் சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவராக பதவி ஏற்கிறார்
நேபாளத்தில் வன்முறை... பிரதமர் ராஜினாமா... ராணுவ ஆட்சி அமல்!
Gold rate: எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வரும் தங்கம் விலை
திருச்சி மரக்கடையை அதிர வைக்க தவெக ரெடி.. ஆனால் தொண்டர்களிடம் நிதானம் தேவை!
அமித்ஷாவை சந்திக்கச் சென்ற செங்கோட்டையன்.. பாஜக., மேலிடம் சொன்ன சேதி என்ன தெரியுமா?
{{comments.comment}}