வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 11வது முறையாக தாத்தாவாகியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் டிஃப்பானி டிரம்பிற்கு மகன் பிறந்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு 31வயதாகும் டிஃப்பானி 27 வயதாகும் மைக்கேல் போலஸை திருமணம் செய்து கொண்டார். இதன்பின்னர் கடந்த அக்டோபர் மாதம் தனது மகள் கர்ப்பமாக இருப்பதை டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். குழந்தை பிறந்தது குறித்து டிஃப்பானி கூறுகையில், எங்களுக்கு மகன் பிறந்துள்ளான். அவருக்கு அலெக்சாண்டர் டிரம்ப் போலஸ் என பெயரிட்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு பச்சிளம் குழந்தை முதல் 18 வயது வரை பேரக் குழந்தைகள் உள்ளனர். ஏற்கனவே டொனால்ட் டிரம்பிற்கு 10 பேரக்குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது 11வது பேரக்குழந்தை பிறந்துள்ளது. இது குறிந்து டிஃப்பானியின் தாயும் டொனால்ட் டிரம்பின் முன்னாள் மனைவியுமான மேப்லஸ் , தனக்கு பேரன் பிறந்திருப்பதை மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2024ம் ஆண்டு குடியரசு கட்சி மாநாட்டில் டொனால்ட் டிரம்பின் பேத்தி கெய் பேசுகையில், என்னை பொருத்தவரை எனது தாத்தா எல்லோரையும் போல் தான். ஆனால், நிறைய மக்கள் என் தாத்தாவை கொடூரனாக பார்க்கிறார்கள். ஆனால் அவர் எங்களுக்கு எப்போதுமே முன்மாதிரியாக திகழ்கிறார். அவரை எங்களுக்கு மிகவும் பிடிக்கும். மீடியாக்கள் அவரை வித்தியாசமான மனிதராகவே சித்தரிக்கிறார்கள். ஆனால் எங்களுக்குத்தான் அவர் எப்படிப்பட்டவர் என்பது தெரியும்.
அவர் எங்களுக்கு சாக்லேட், சோடா வாங்கி கொடுத்துள்ளார். நாங்கள் பள்ளியில் எப்படி படிக்கிறோம் என்பதை ஆர்வமாக கேட்டு தெரிந்து கொள்வார். நான் பள்ளியில் சிறந்த மாணவனாக விளங்கிய போது அதை அவருடைய நண்பர்களுடன் பெருமையாக பகிர்ந்து கொண்டார் என்று தெரிவித்துள்ளார்.
100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை
எஸ்ஐஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு
Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா தவெக?
ஈரோடு விஜய் பிரச்சாரம்.. ஏகப்பட்ட நிபந்தனைகள்.. கடைப்பிடிப்போம் என பத்திரம் கொடுத்த தவெக!
மார்கழி மாதம் .. அணிவகுத்து நிற்கும் முக்கிய வழிபாடுகள்!
வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில்.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வழிபாடு
மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!
தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!
மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!
{{comments.comment}}