சென்னை: விஜய் நா வரேன், வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு என்ற வாசகத்துடன் கூடிய விஜய்யின் பிரச்சார லோகோ வெளியிடப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் கடந்த ஆண்டு கட்சியை ஆரம்பித்தார். 2026ம் ஆண்டு தேர்தலை இலக்காக வைத்து நாளைக்கு தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை திருச்சியில் தொடங்குகிறார். தவெகவின் சுற்றுப்பயணத்திற்கு 23 நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி அளித்துள்ளது. தவெகவின் முதல் சுற்றுப்பயணம் நாளை காலை திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை பகுதியில் இருந்து தொடங்குகிறது.
திருச்சி போலீசாரின் நிபந்தனைகள் தவெகவினருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் தவெக தலைவர் விஜய் பிரச்சார சுற்றுப்பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாக செய்ய முடிக்கிவிட்டுள்ளார். நாளை தொடங்கும் விஜய்யின் பிரச்சார சுற்றுப்பயணம் திருச்சியில் தொடங்கி மதுரையில் முடிய உள்ளது. விஜய்யின் பிரச்சாரத் திட்டப் பயணம்:

செப்டம்பர் 13 - திருச்சி, பெரம்பலூர், அரியலூர்
செப்டம்பர் 20 - நாகப்பட்டினம், திருவாரூர். மயிலாடுதுறை
செப்டம்பர் 27 - திருவள்ளூர், வட சென்னை
அக்டோபர் 04, 05 - கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு
அக்டோபர் 11 - கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி
அக்டோபர் 18 - காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை
அக்டோபர் 25 - தென் சென்னை, செங்கல்பட்டு
நவம்பர் 01 - கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்
நவம்பர் 08 - திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்
நவம்பர் 15 - தென்காசி, விருதுநகர்
நவம்பர் 22 - கடலூர்
நவம்பர் 29 - சிவகங்கை, ராமநாதபுரம்
டிசம்பர் 12 - தஞ்சாவூர், புதுக்கோட்டை
டிசம்பர் 13 - சேலம், நாமக்கல், கரூர்
டிசம்பர் 20 - திண்டுக்கல், தேனி, மதுரை
இந்நிலையில், தவெக பிரச்சார் லோகோவை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று வெளியிட்டுள்ளார். அந்த லோகோவில் உங்கள் விஜய் நா வரேன். வாகை சூடும் வரலாறு திரும்புகிறது. வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு ஆகிய வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது...எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
பள்ளி அங்கீகார மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் நாளை விசாரணை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் 2026: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
அரசிதழில் பெயரை மாற்றி திமுக எம்.பி., கனிமொழி...இனி இது தான் இவர் பெயர்
ஓங்கி ஒலித்த நிர்மலா சீதாராமன்.. ஓர் அற்புதமான நினைவுச் சுவடு!
ஆண்டுகள் பதினேழு ஆன பின்பு மீண்டுமொரு புனிதக் குளியல்.. மாமதுரை குடமுழுக்கு!
புரட்டாசி மாதத்தில் அசைவம் தவிர்க்க வேண்டும்.. காரணம் அறிவியலா.. ஆன்மீகமா?
Madurai Sourashtra recipe: சத்தான சுவையான.. கறுப்பு முழு உளுந்து சுண்டல்!
{{comments.comment}}