விழுப்புரம் : தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கட்சி கொடியை ஏற்றி வைத்த நடிகரும், கட்சி தலைவருமான விஜய்யின் வலது கையில் காயம் இருந்தது. விஜய் கையில் இருக்கும் காயத்திற்கு என்ன காரணம் என அனைவரும் ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகில் உள்ள வி.சாலையில் இன்று நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான தொண்டர்களும், ரசிகர்களும் பெருந்திரளாக குவிந்த இந்த மாநாடு விஜய்க்கு பெரும் உணர்ச்சி பூர்வமாக அமைந்தது. கட்சி தொண்டர்களையும், அவர்கள் அளித்த வரவேற்பையும் பார்த்த விஜய் கண் கலங்கினார். அதற்கு பிறகு மாநாட்டு திடலின் மத்தியில் 101 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பத்தில் கட்சியின் கொடியை மேடையில் இருந்து பட்டனை அழுத்தி ஏற்றி வைத்தார் விஜய்.

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு பல்வேறு மீடியாக்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இது தவிர மாநாட்டு திடலிலும் பல இடங்களில் எல்இடி திரைகள் அமைத்து மேடையில் நடப்பதை காண்பதற்கு வழிவகை செய்யப்பட்டது. கட்சியின் கொடியை ஏற்றுவதற்காக பட்டனை அழுத்திய விஜய்யின் கை க்ளோசபில் காட்டப்பட்டது. அப்போது அவரது கையில் நடு விரலின் மேற்பகுதியில் கருப்பு நிறத்தில் காயம் இருந்தது. கைகளில் சில இடங்களில் காயம் இருந்தது காட்டப்பட்டது.
விஜய் கையில் என்ன காயம் உள்ளது என தொண்டர்கள், ரசிகர்கள் என பலரும் பதறிப் போய் காரணம் கேட்க துவங்கி விட்டனர். ஆனால் விஜய் தற்போது டைரக்டர் ஹச்.விஜய் இயக்கத்தில் தளபதி 69 என்ற படத்தில் நடிக்க துவங்கி உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங்கில் விஜய்க்கு கையில் லேசாக காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}