விழுப்புரம்: ரிமோட் பட்டனை அழுத்தி 101 அடி உயர கம்பத்தில் தமிழக வெற்றி கழகத்தின் கொடியை ஏற்றி உசரப் பறந்தபோது அதைப் பார்த்து பெருமையுடன் புன்னகைத்தார் விஜய். தொண்டர்களும் இதை உணர்ச்சி பொங்க வரவேற்றனர்.
தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு 4 மணிக்கு தொடங்குவதற்கு பதிலாக, கூட்டம் அலைமோதியதால் மாநாடு 3 மணிக்கே தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், கொங்கு நாட்டின் வள்ளி கும்மியாட்டம் உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இதனை தொடர்ந்து அரங்கத்தில் என்ட்ரியான விஜய் ரேம்ப் வாக் செய்து தொண்டர்களை சந்தித்தார். அப்போது தொண்டர்கள் வீசி எறிந்த துண்டுகளை தோளில் போட்டுக் கொண்ட படி உற்சாகத்துடன் ரேம்ப்வாக் செய்தார் விஜய்.பிறகு தொண்டர்களின் வாழ்த்துக்களையும் வரவேற்பையும் கண்டு கண்கலங்கினார்.
இதனையடுத்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. ரிமோட் பட்டனை அழுத்தி மேடையில் இருந்தபடி, 101 அடி உயர கொடி கம்பத்தில் மாநாட்டு கொடியை ஏற்றிய மெது மெதுவாக உயிரே சென்று பட்டொளி வீசி பறந்தது. இதைப் பார்த்து விஜய் பெருமையுடன் புன்னகைத்தார்.
அதன் பின்னர் தவெகவின் உறுதி மொழியை பொருளாளர் வெங்கட்ராமன் வாசிக்க அனைவரும் எழுந்து நின்று வாசித்தனர். அப்போது நெஞ்சில் கை வைத்து தொண்டர்கள் உறுதியேற்றனர். இதனை தொடர்ந்து தவெக மாநாட்டில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து வெற்றி வெற்றி என தொடங்கும் தவெக கொள்கை பாடல் வெளியிடப்பட்டது. காமராஜர், பெரியார், அம்பேத்கரை மையப்படுத்தி தெருக்குரல் அறிவு எழுதி பாடிய பாடல் மேடையில் ஒலித்தது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}