தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!

Jan 22, 2026,07:15 PM IST

சென்னை: சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு  செய்துள்ளது.


தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விஜய்யின் தவெக கட்சி. தவெக தனது கட்சியின் முதல் தேர்தல் களத்தைச் சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. இதற்காகத் தேர்தல் ஆணையத்திடம் சின்னம் கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.


தவெக தரப்பில் விசில், ஆட்டோ, மட்டைப்பந்து உள்ளிட்ட 10 சின்னங்கள் விருப்பப்பட்டியலில் வழங்கப்பட்டிருந்தன. அதில் 'விசில்' சின்னத்தையே கட்சித் தலைமை அதிகம் விரும்பியதாகக் கூறப்படுகிறது.




பொதுமக்களிடையே எளிதில் சென்றடையக்கூடிய மற்றும் இளைஞர்களைக் கவரக்கூடிய சின்னம் என்பதால் 'விசில்' சின்னம் தவெக-வுக்கு ஒரு பலமாகப் பார்க்கப்படுகிறது. "மக்களின் குரலை ஒலிக்கச் செய்யும் அடையாளமாக இந்த விசில் சின்னம் அமையும்" என தவெக நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

விடுதலை வேண்டா பசி!

news

சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

அதிகம் பார்க்கும் செய்திகள்