முதல்வர் வேட்பாளர் விஜய்.. அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. பிகே வருகைக்குப் பிறகு மாறிய தவெக மனசு!

Feb 28, 2025,07:51 PM IST

சென்னை: அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் 27ம் தேதி மிக பிரமாண்டமாக விக்கிரவாண்டி வி சாலையில் நடைபெற்றது. அப்போது விஜய் பேசும் போது, 2026ல் தனிப்பெரும்பான்மையுடன் மக்கள் வெற்றி பெற வைப்பார்கள். நம்முடன் வர நினைப்பவர்களுடன் இணைந்து பணியாற்றவும் தயார். கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், தவெக கட்சிக்கு அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் வந்த பின்னர் விஜய் கட்சியில் நிலைப்பாட்டில் பல  மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக, மக்கள் மத்தியில் விஜய்க்கு அதிகளவில் அதரவு இருப்பதாகவும், சர்வ சாதாரணமாகவே 20 சதவீத வாக்குகள் விஜய் கிடைக்கும் என்று திட்டவட்டமாக பிரசாந்த் கிஷோர் கூறியு்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே விஜய்யின தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றும், முதல்வர் வேட்பாளராக விஜய் தான் இருப்பார் என்றும் தவெக முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.




மேலும் தங்களது தலைமையில்தான் கூட்டணி என்றும், தங்களது தலைமையை ஏற்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி என்ற நிலைப்பாட்டையும் தவெக எடுத்துள்ளதாம். தங்களுக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் கட்சி என்றால் அது அதிமுக தான். தற்போது எதிர்கட்சி தலைவராக இருப்பவரும் எடப்பாடி பழனிச்சாமி தான். அந்த கட்சியின் இடத்தை தான் தவெக குறி வைக்கிறது. அதாவது அதிமுக இடத்தை தவெக பிடிக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக உள்ளது. திமுக vs அதிமுக என்பதை மாற்றி தவெக vs திமுக  என்று மாற்றுவதே விஜய்யின் நோக்கமாக உள்ளதாம். அந்த இடத்திற்கு வந்தால் தான் ஆளும் கட்சியான திமுகவை எதிர்க்க முடியும் என்று விஜய் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் அதிமுகவை கூட்டணிக்கு சேர்த்து கொண்டால் விஜய்யின் இமெஜ் பாதிக்கப்படும் என்பதால், விஜய் அதிமுகவுடன் கூட்டணி வைக்க விருப்பாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


அதே சமயம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பிற கட்சிகள் கூட்டணிக்கு வந்தால் விஜய் சேர்த்துக்கொள்ள திட்டமிட்டு இப்பதாகவும். அந்த கட்சிகளும் விஜய் பேச்சிற்கு கட்டுப்பட்டு தான் இருக்க வேண்டும் என்று விஜய் நினைப்பதாகவும தவெக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கினறன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னை புத்தகக் கண்காட்சி 2026.. தேதி சொல்லியாச்சு.. புத்தகப் பிரியர்களே.. ரெடியாகுங்க!

news

தென்காசி மற்றும் திருநெல்வேலியில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

news

மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா?.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

இந்தியா முழுவதும் இன்று ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து

news

திருப்பரங்குன்றம் தீப வழக்கு... தீர்ப்பு ஒத்திவைப்பு: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

news

நான் எந்த சூழ்நிலையிலும் தனிக் கட்சி ஆரம்பிப்பேன் என்று சொல்லவில்லை ஓ. பன்னீர்செல்வம்!

news

சென்னையில்.. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் அபாயம்!

news

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. ரிசர்வ் வங்கி நடவடிக்கை.. இஎம்ஐ குறையலாம்!

news

திருவண்ணாமலை தூய்மைப் பணியாளர்களை.. கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன கலெக்டர்

அதிகம் பார்க்கும் செய்திகள்