சென்னை: தமிழர்களின் தனிப்பெரும் கடவுள் முருகப்பெருமானை போற்றுவோம். அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துக்கள் என நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவரான விஜய் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழும் நடிகர் விஜய் தற்போது எச் வினோத் இயக்கத்தில் விஜய் 69 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜனநாயகன் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் தலைப்பு குறித்த போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படத்தின் டைட்டில்லை வைத்து படத்தில் விஜயின் அரசியல் பஞ்ச்கள் மற்றும் டயலாக்குகள் தெறிக்க விடப்போகிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதே சமயத்தில் விஜயின் ஜனநாயகன் படத்துடன் தமிழ் சினிமா வாழ்க்கைக்கு முழுக்கு போடும் கடைசி படமாக இருப்பதால் ரசிகர்களிடையே இப்படம் குறித்த ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக வெற்றி கழகத்தின் கட்சி அலுவலகம் அமைந்துள்ள பனையூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்து வரும் நிலையில் தற்போது விஜயின் புலி படத்திற்கு பிறகு மீண்டும் நடிகை ஸ்ருதிஹாசன் ஜனநாயகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது.
மறுபக்கம் தமிழக வெற்றி கழகம் கட்சி தொடங்கி ஓராண்டுகள் நிறைவடைந்த நிலையில் மாவட்ட செயலாளர் நியமனம் தொடர்பாக நடிகர் விஜய் தீவிரமாக செயல்பட்டு நிர்வாகிகள் நியமித்து வருகிறார். மற்ற கட்சியினரும் தவெகவில் இணைந்து வருகின்றனர். இதனால் அரசியல் களத்தில் விஜயின் செயல்பாடுகள் பக்காவாக பிளான் போட்டு செய்து வருவதாக பலரும் அரசல் புரசலாக கூறி வருகின்றனர். அதே சமயத்தில் விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களமிறங்க இருப்பதால் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரிடையே பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்துவதோடு 2026 ஆம் ஆண்டு தேர்தல் களம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே தற்போது அரசியல்வாதியாக களம் கண்டு வரும் நடிகர் விஜய் தமிழ்நாட்டு மக்களுக்கு பண்டிகை காலங்களில் தனது வாழ்த்துக்களையும் அறிவுறுத்தல்களையும் வழங்கி வருகிறார். அந்த வரிசையில் முருகபெருமானுக்கு உகந்த தைப்பூசத் திருநாளான இன்று அறுபடை வீடுகளிலும் தைப்பூச திருநாள் கொண்டாட்டம் களைகட்டி உள்ளது. தைப்பூசத் திருநாளை கொண்டாடுவதற்காக மக்கள் முருகன் கோவில்களை படையெடுத்துச் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அனைத்து மக்களுக்கும் தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துக்கள் என தவெக தலைவர் விஜயின் தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
தனித்துயர்ந்த
குன்றுகள் தோறும்
வீற்றிருக்கும்
தமிழ்நிலக் கடவுள்;
உலகெங்கும் வாழும்
தமிழர்களின்
தனிப்பெரும் கடவுள்
முருகப் பெருமானைப்
போற்றுவோம்!
அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே, பிரஷாந்த் கிஷோருடன், தவெக தலைவர்கள் இன்றும் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர். நேற்று நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டுக்கு வந்த பிரஷாந்த் கிஷோர், அவருடன் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் இன்று புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா மற்றும் பிரஷாந்த் கிஷோர் ஆகியோர் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த சந்திப்பின்போது ஜான் ஆரோக்கியசாமியும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் எதிரலொலியாக வருகிற 2026 தேர்தலில் விஜய் கட்சிக்கு பிரஷாந்த் கிஷோர் ஆலோசகராக செயல்படும் வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் தேர்தல் வியூக வகுப்பதிலிருந்து தற்போது பிரஷாந்த் கிஷோர் விலகி விட்டதால், கைட் மட்டும் செய்வார் என்று தெரிகிறது.
திரியோதசியில் வரும்.. ஆவணி மாத பிரதோஷம்.. சிவனையும், நந்தியையும் வழிபட உகந்த நாள்!
மதிமுக கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யா தற்காலிக நீக்கம்: வைகோ
46 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் கமல்-ரஜினி?.. மாஸ் காட்டப் போகும் லோகேஷ் கனகராஜ்!
தொடர்ந்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வரும் தங்கம் விலை... இன்று எவ்வளவு குறைவு தெரியுமா
டில்லியில் 50 க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெளிகுண்டு மிரட்டல்
பாஜகவின் புதிய செக்.. முதல்வர், அமைச்சர்கள் கைதானால் 30 நாளில் பதவி காலி.. புது மசோதா!
டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது திடீர் தாக்குதல்.. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரால் பரபரப்பு
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 20, 2025... இன்று அதிர்ஷ்டம் கதவை தட்டும்
களை கட்டியது தவெக மாநில மாநாடு... சாலை மார்க்கமாக மதுரை வந்தடைந்தார் விஜய்!
{{comments.comment}}