கோவையில் மண்டலவாரியாக 5 இடங்களில் பூத் கமிட்டி மாநாடு... தவெக திட்டம்!

Apr 12, 2025,01:24 PM IST
சென்னை: கோவையில் மேற்கு, மத்திய, தெற்கு, வடக்கு, டெல்டா மண்டலம் என 5 மண்டலங்களாக பிரித்து பூத் கமிட்டி மாநாட்டை நடத்த தவெக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தவெக கட்சி 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக ஒவ்வொரு காய்களையும் துரிதமாக நகர்த்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். விக்கிரவாண்டி வி சாலையில் கட்சியின் முதல் மாநாட்டை மிகவும் பிரம்மாண்ட அளவில் நடத்தியிருந்தார் விஜய். கிட்டதட்ட இந்த மாநாட்டிற்கு 10 லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.  அதற்கு அடுத்த படியாக,  234 தொகுதிகளை கொண்ட தமிழ்நாட்டில் 120 மாவட்டங்களாக பிரித்து ஒவ்வொரு தொகுதிக்கும் இரண்டு உறுப்பினர்கள் வீதம் மாவட்ட நிர்வாகிகளை நியமித்தார் தவெக தலைவர் விஜய்.  அதனைத்தொடர்ந்து கட்சியின்  முதல் பொதுக்குழு கூட்டத்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறப்பாக நடத்தினார். அதில் நான் எதிர்க்கும் கட்சிகளின் தலைவர் பெயர்களை கூறி பேசியிருந்தார் விஜய். 

கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சிப்பணியாக பூத் ஏஜெண்டுகள் மாநாட்டை  நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழகத்தில் உள்ள 60,000 ஆயிரம் பூத்துகளில் ஏஜெண்டுகம் நியமிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், மாநாட்டை மண்டல வாரியாக நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். இந்த பூத் ஏஜெண்டுகள் மாநாடு முதல் கட்டமாக கோவையில் நடத்த இருப்பதாகவும், அந்த மாநாட்டிற்காக கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இடம் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 



இந்த பூத் ஏஜெண்ட் மாநாட்டை கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடத்தவும், மாநாட்டில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படவும் உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. பூத் ஏஜெண்ட் மாநாடு நடைபெறும் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும்  நேற்று தெரிவிக்கப்பட்டிருந்து.

இந்நிலையில்,  கோவையில் நடந்த உள்ள பூத் கமிட்டி மாநாட்டை மேற்கு, மத்திய, தெற்கு, வடக்கு, டெல்டா மண்டலம் என 5 மண்டலங்களாக பிரித்து  நடத்த தவெக திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த பூத் கமிட்டி மாநாட்டில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பூத் கமிட்டி மாநாடு முடிந்த பின் தங்கள் கட்சியின் முழு பலம் அனைவருக்கும் தெரியவரும் என விஜய் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்