சென்னை: தேர்தலின்போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே.... என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன. தேர்தலின்போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது. இதற்குப் பல்வேறு சான்றுகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது, நீட் தேர்வு விவகாரம் சார்ந்தது.
கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்தவர்கள், தற்போதைய ஆட்சியாளர்கள். ஆனால் தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசிற்குத் தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா?
எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார் விஜய்.
தவெக தலைவர் விஜய் தற்போது தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். அவரது கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் நியமனம் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று நடந்த மாவட்ட நிர்வாகிகள் தொடர்பான முக்கியக் கூட்டத்தில் விஜய் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் தொடர்பான நிலைப்பாட்டையும் இன்னும் தவெக அறிவிக்கவில்லை. இந்த நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில்.. இன்று 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு.. நாளை 5.. வானிலை மையம் தகவல்
பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் பேராபத்து.. உதயநிதி ஸ்டாலின் கருத்து
நடிகர் விஜய் இந்தியா கூட்டணியில் வந்து சேரலாம்.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை யோசனை!
வெகுவிரைவில் மக்கள் திமுக ஆட்சியை புறக்கணிப்பார்கள்.. பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
இந்த வருடம் நாங்கள் ஏன் சர் ஜான் மார்ஷல் பொங்கல் என்று கொண்டாடினோம்?
Taste Atlas most hated foods 2025.. லிஸ்ட்டுல உப்புமா இல்லை.. பஞ்சாபி மிஸ்ஸி ரொட்டிக்கு 56வது இடம்!
சாம்பியன்ஸ் டிராபி 2025.. இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ.. துணை கேப்டனானார் சுப்மன் கில்!
Budget 2025.. ஜன. 31 முதல் பிப். 13 வரை பட்ஜெட் கூட்டத்தொடர்.. பிப். 1ல் பட்ஜெட் தாக்கல்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பு மனுக்கள் ஏற்பு!
{{comments.comment}}