சென்னை : தவெக தலைவரும் நடிகருமான விஜய், அக்டோபர் 17ம் தேதி கரூர் சென்று, கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு கல்யாண மண்டபத்தில் வைத்துத பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை விஜய் சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.
செப்டம்பர் 27ம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்காக விஜய் கரூர் சென்ற போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பத்திற்கு விஜய் தாமதமாக வந்தது தான் காரணம் என தமிழக அரசு சார்பில் கோர்ட்டில் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. கரூர் சம்பவம் நடந்த போது அங்கு இருக்காமல் விஜய் தப்பி ஓடி விட்டார் என்றும், பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்திக்கவில்லை எனவும் பல்வேறு தரப்பினரும் விஜய் மீது குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் கரூர் சம்பவம் நடந்த 4 நாட்களுக்கு பிறகு விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதில் கரூர் சம்பவத்தால் மிகுந்த மன வலியை உணர்வதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வரும் அக்டோபர் 17ம் தேதி விஜய், கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கரூரில் உள்ள தனியார் கல்யாண மண்டபம் ஒன்றில் பாதிக்கப்பட்டவர்களை வரவழைத்து, விஜய் சந்திக்க உள்ளதாகவும், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, நிவாரண நிதியையும் தனது கையால் வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் முறையாக விஜய் வீட்டில் இருந்து புறப்பட்டு வெளியே வருவதால் என்ன நடக்கும், இப்போதும் விஜய்க்கு அவரது தொண்டர்களிடம் வரவேற்பு, எதிர்பார்ப்பு இருக்குமா? அவரை காண மக்கள் வருவார்களா? என்பது போன்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. இந்த சர்ச்சைகளை விஜய் எப்படி எதிர்கொள்ள போகிறார் என்பதையும் தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அதேசமயம், விஜய்யை மீண்டும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தாமல் இருப்பதும், அவருக்கு சிக்கல் வராமல் இருப்பதும் முழுக்க முழுக்க தவெகவினர் கையில்தான் உள்ளது. அவர்கள் கட்டுப்பாடு காத்து நல்லபடியாக விஜய் கரூர் வந்து செல்வதற்கு வழி விட்டாக வேண்டிய கட்டாயம் உள்ளது. காரணம், தற்போது உச்சநீதிமன்றம் வரை கரூர் விவகாரம் போயுள்ளது. எனவே ஏதாவது ஒரு சிறு தவறு நடந்தாலும் கூட ஒட்டுமொத்தமாக விஜய் அரசியலையே ஊற்றி மூடி விட அது வழி வகுத்து விடும் என்பதால் தவெக தொண்டர்கள்தான் விஜய்யை பிரச்சினை இல்லாமல் கரூர் வந்து செல்வதற்கு உதவ வேண்டிய நிலையில் உள்ளனர்.
ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன், சசிகலா நால்வர் கூட்டணியால் யாருக்கு பலம்.. யாருக்கு பலவீனம்?
கோவையில் கடத்தப்பட்ட இளம் பெண்ணை மீட்க என்ன நடவடிக்கை?... டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கும், நாளை 4 மாவட்டங்களுக்கும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் காலதாமதமா? ஆளுநர் மாளிகை விளக்கம்
கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி: செங்கோட்டையன் பேட்டி!
பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு திமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டாமா?:எடப்பாடி பழனிச்சாமி
யாரும் செய்யாத பித்தலாட்டம்..திருச்சியில் கூட தங்காமல் விஜய் சென்னைக்கு ஓடி விட்டார்: வைகோ ஆவேசம்!
ஜனநாயகத்தை பாதுகாக்க திமுகவினர் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மோடியுடன் பேச்சுவார்த்தை சிறப்பாக உள்ளது.. இந்தியா வரப் போகிறேன்.. அதிபர் டிரம்ப் தகவல்
{{comments.comment}}