சென்னை : தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதிமுகவினரின் சொத்துக்கள் பட்டியலை தயாரிக்க தவெக கட்சி தலைவர் விஜய் உத்தரவிட்டதைத் தொடர்ந்து தற்போது அவரது கட்சி நிர்வாகிகள் தீயாய் வேலை செய்து கொண்டிருக்கிறார்களாம். இந்நிலையில் விஜய் மற்றொரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
தவெக நிர்வாகிகளுக்கு விஜய் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளராம். கட்சிக்குள் பிறப்பிக்கப்பட்டுள்ள Internal உத்தரவு இது. அதன்படி தற்போதைய திமுக முக்கியஸ்தர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கல் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த எம்பி, எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய புள்ளிகளின் சொத்து விபரம், முதலீடுகள், அவர்களுக்குப் பினாமிகள் உள்ளனரா என்ற விவரம் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் சேகரித்து தர வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் உத்தரவிட்டுள்ளதாக செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.
இதேபோலத்தான் முன்பு பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு பட்டியலை வெளியிட்டார். இதையடுத்து முன்னாள் அமைச்சரான எம்.பி. டி.ஆர்.பாலு, அண்ணாமலை மீது வழக்குத் தொடர்ந்தார். தற்போது அதே பாணியில் விஜய்யும் இப்படி ஒரு லிஸ்ட்டைக் கேட்டுள்ளார். ஆனால் அண்ணாமலை செய்தது போல இல்லாமல் உரிய ஆதாரங்களுடன், முறைகேடுகள், ஊழல்கள் இருந்தால் அதை மட்டும் தயார் செய்யுமாறு விஜய் உத்தரவிட்டுள்ளாராம்.
தீவிரமாக களம் குதித்த நிர்வாகிகள்
முக்கிய அரசியல் புள்ளிகளின் ஊழல் + சொத்துப் பட்டியலை தயாரித்து தரும் படி விஜய் சொன்னதும் மாவட்ட நிர்வாகிகள் மட்டுமல்ல விஜய்க்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவாக இருக்கும் பலரும் களத்தில் இறங்கி தீயாய் வேலை செய்து வருகிறார்களாம். குறிப்பாக முன்னாள் காவல்துறை அதிகாரிகள் பலரும் கூட இதில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் தவெக ஐடி விங்கிற்கு தகவல்கள், தமிழகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இருந்து வந்து குவிந்து கொண்டிருக்கிறதாம். முன்னாள் அரசு ஊழியர்கள், அதிகாரிகள், தற்போதைய அதிகாரிகள் வரை பலரும் கூட இந்த விஷயத்தில் விஜய்க்கு ஆதரவாக செயலாற்றி வருவதாக சொல்லப்படுகிறது.
தங்க மோதிரம் ஆபர்!
தற்போது மாவட்ட செயலாளர்களின் பணியை துரிதப்படுத்துவதற்காக விஜய் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளாராம். அதாவது, யார் முதலிலும், அதிக அளவிலும், சரியான முறையிலும் ஊழல் பட்டியல் விபரங்களை சேகரித்து தருகிறார்களோ அவர்களுக்கு விஜய் தன்னுடைய கையால் தங்க மோதிரம் அணிவித்து கவுரவிக்க போகிறாராம். இந்த தகவல் கட்சி வட்டாரத்தில் பரவியதும், ஐடி விங்கின் தலைமை கழகத்தின் கம்யூட்டரே திணறும் அளவிற்கு தகவல்களை கொண்டு வந்து கொட்டிக் கொண்டிருக்கிறார்களாம்.
விஜய்யின் அடுத்தடுத்த அதிரடிகளால் தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல் கட்சிகள், அடுத்து விஜய் என்ன செய்ய போகிறார் என கணிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். விஜய் கட்சியினரிடம் பேசுவதற்கு கூட தயங்கி தெறித்து ஓடுவதாக சொல்லப்படுகிறது. மறுபக்கம் விஜய் கட்சியினர் டிசைன் டிசைனாக உத்திகளை வகுத்து வருவதால் அரசியல் களம் வரும் நாட்களில் அதீதமாக தகிக்கும் என்றே தெரிகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி.. வைத்தது யார்.. சீக்கிரம் கண்டுபிடிப்பேன்.. டாக்டர் ராமதாஸ்
அரசியல் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்.. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு
ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 1996 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்: உடனே விண்ணப்பிக்கவும்!
தமிழ் தெரிந்தவர்களுக்கு வடபழநி முருகன் கோவிலில் வேலைவாய்ப்பு: மாதம் ரூ.50,000 வரை சம்பளம்
மணக்கமணக்க சாப்பிடலாம்.. மதுரையில் பிரம்மாண்ட உணவுத் திருவிழா 2025.. சுவைக்க வாங்க!
இலவச விமானப் பயணம்.. ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தரும் அசத்தலான சலுகை!
சாதனை இந்தியர் சுபான்ஷு சுக்லா.. 14ம் தேதி பூமி திரும்புகிறார்.. தடபுடலாக வரவேற்கத் தயாராகும் நாசா!
தங்கம் விலை நேற்று மட்டும் இல்லீங்க இன்றும் உயர்வு தான்... அதுவும் சவரனுக்கு ரூ.440 உயர்வு!
{{comments.comment}}