சென்னை: தமிழ் காக்க உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் என நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.
இன்று மொழிப் போர் தியாகிகள் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தி சிறை சென்று உயர் நீத்த மொழிப்போர் தியாகிகளான நடராசன், தாளமுத்து ஆகியோரின் நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்துவது வழக்கம்.
சென்னை மூலக்கொத்தளம் பகுதியில் மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன் நினைவிடம் ரூ.32 லட்சம் செலவில் தமிழக அரசால் புதுபிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மொழிப் போர் தியாகிகள் நினைவிடத்தில் மலர் தூவி மறியாதை செய்து வருகின்றனர். இந்தி மொழி திணிப்பை எதிர்த்தும், தாய் மொழியாம் நம் தமிழ் மொழியை காக்க, தங்களின் உயிரை துச்சமென நினைத்து, வீறு கொண்டு எழுந்து கடுமையாக போராடி, தங்களின் இன்னுயிரை தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் வீரத்திற்கும், தியாகத்திற்கும் எனது செம்மார்ந்த வீரவணக்கங்கள்! எவ்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அதேபோல மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி தனது எக்ஸ் தள பதிவில் பதவு ஒன்றை வெளியிட்டுள்ளார் தவெக தலைவர் விஜய், அதில்,
உலகில், தன் தாய்மொழி காக்க, தன்னெழுச்சியுடன் போராடிக்கொண்டே இருக்கும் இனம், தமிழினம்.
தமிழ் காக்கக் களமாடி உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம்.
உயிர்நீத்த தியாகிகளின் நினைவைப் போற்றி வணங்கி, நம் உயிரனைய, ஒப்பற்ற தாய்மொழி தமிழ் காக்க இந்நாளில் உறுதி ஏற்போம்.
தமிழ் வாழ்க என்று தெரிவித்துள்ளார் விஜய்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை
தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது
வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?
50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?
சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?
சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!
சுதந்திரம் காப்போம்!
{{comments.comment}}