சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய், தனது கட்சியின் 6வது மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய் தனது கடைசி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். மறுபக்கம் கடந்த ஆண்டு தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கிய விஜய், 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் களம் காண்பது தொடர்பாக தீவிரமான முன்னெடுப்புகளை கையாண்டு வருகிறார். அக்கட்சியின் உட்கட்டமைப்பு பணிகளை வலுப்படுத்த பல்வேறு வழிகளில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
தவெகவில் மகளிர் அணி, இளைஞர் அணி மருத்துவர் அணி மாணவர் அணி என 28 அணிகளை உருவாக்கியுள்ளார். இந்த அணிகளுக்கும் தலைவர் செயலாளர் என பல்வேறு பொறுப்புகள் விரைவில் வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் பனையூர் விசிட், கட்சி ஓராண்டு நிறைவு விழா போன்றவற்றில் திமுக மற்றும் பாஜகவை விமர்சித்து விஜய் பேசிய கருத்துக்கள் தற்போது வரை அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதே சமயத்தில் தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகளை 120 மாவட்டங்களாக பிரித்து, ஒவ்வொரு தொகுதிக்கும் இரண்டு மாவட்ட நிர்வாகிகள் வீதம் நியமிக்க, கட்சித் தலைவர் விஜய் திட்டமிட்டு அதன்படி தற்போது மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
5 கட்டமாக இதுவரை, 95 மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விஜய் உருவம் பதித்த வெள்ளி நாணயமும் வழங்கப்பட்டது. மீதமுள்ள மாவட்ட செயலாளர்களுக்கான இறுதிப்பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார் தவெக தலைவர் விஜய். இதற்காக அவர் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார். அங்கு நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் தற்போது 19 மாவட்ட நிர்வாகிகளின் பட்டியலை விஜய் வெளியிட்டுள்ளார்.
இவர்களையும் சேர்த்தால் இதுவரை 114 மாவட்ட நிர்வாகிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களின் விவரம் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. இதற்கிடையே மாவட்ட நிர்வாகிகள் பதவிக்கு கடும் போட்டி நிலவுவதால் அதை சமாளிக்க மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது.
TVK District Secretaries - Full List
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 04, 2025... இன்று நம்பிக்கை அதிகரிக்கும் நாள்
தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் உடல் நலக்குறைவால் காலமானார்
குடும்பங்களுக்கு வருமானத்தை ஈட்டி தரும் வீட்டுக்கூரை சூரிய மின்சக்தி திட்டம்
ஈரோட்டில் வாழைப்பழம் சாப்பிட்ட சிறுவன் மூச்சு திணறி பலி!
வருகிறார் வா வாத்தியார்.. ரீலீஸ் தேதி அறிவிப்பு.. 3வது லிரிக்கல் வீடியோவும் வெளியானது
முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமான சந்தித்து பேசினோம்: செல்வப்பெருந்தகை பேட்டி
இந்திய ரூபாய் மதிப்பில் வரலாறு காணாத வீழ்ச்சி.. அனைத்து விலைகளும் உயரும் அபாயம்!
வின்டோஸ் அப்டேட் குழப்பத்தால்.. நாடு முழுவதும் பல விமானங்கள் ரத்து.. சேவைகளில் தாமதம்
அமெரிக்காவை அதிர வைக்கும் Bomb Cyclone.. பல ஊர்களை பனி மூடியது!
{{comments.comment}}