சென்னை: பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து நடந்து வரும் போராட்டக் களத்திற்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் நாளை செல்லவுள்ளார். அங்கு போராட்டக் குழுவினரை நேரில் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவிக்கவுள்ளார்.
சென்னையில் தற்போது மீனம்பாக்கத்தில் விமான நிலையம் உள்ளது. சர்வதேச விமான நிலையமாக இருக்கும் சென்னைக்கு இந்த விமான நிலையம் போதுமானதாக இல்லை. இதை விஸ்தரிக்கும் முயற்சிகளும் நடந்தன. இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே பரந்தூரில் கிரீன்பீல்ட் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
பெங்களூரில் உள்ளது போல பிரமாண்டமான அளவில் இந்த விமான நிலையம் அமைக்கவும், இந்த விமான நிலையத்துடன் மெட்ரோ ரயில் கட்டமைப்பை இணைக்கவும் விரிவான திட்டங்கள் தீட்டப்பட்டு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. ஆனால் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த 3 வருடமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பரந்தூர் விமான நிலையத் திட்டம் தாமதமாகி வருகிறது.
விவசாய நிலங்களை எடுத்து விட்டு விமான நிலையத்தை அமைத்தால் தங்களது வாழ்வாதாரம் மட்டுமல்லாமல், சென்னையைச் சுற்றிலும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று விவசாயிகளும், கிராமத்தினரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், நாளை பரந்தூர் சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களைச் சந்திக்கவுள்ளார். இதற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. முதலில் அம்பேத்கர் திடல் பகுதியில் மக்களைச் சந்திக்க விஜய் திட்டமிட்டிருந்தார். ஆனால் தற்போது அது மாற்றப்பட்டு அருகில் உள்ள வீனஸ் வெட்டிங் ரிசார்ட் என்ற தனியார் திருமண மண்டபத்தில் வைத்து சந்திப்பு நடைபெறவுள்ளது.
விஜய் கட்சி ஆரம்பித்த பின்னர் இதுவரை மக்கள் களத்திற்கு வந்ததில்லை. மக்கள் பிரச்சினைகளுக்காக அவர் குரல் மட்டுமே கொடுத்து வந்தார். இந்த நிலையில்தான் முதல் முறையாக அவர் பரந்தூர் வருகிறார். இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் வருவதால் மிகப் பெரிய அளவில் அவரது கட்சியினரும் அங்கு திரளும் வாய்ப்புள்ளது. இதனால் போதிய பாதுகாப்புக்கும் காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.
பரந்தூர் போராட்டக் குழுவினரை சந்தித்துப் பேசிய பின்னர் செய்தியாளர்களை விஜய் சந்திப்பாரா என்று தெரியவில்லை. ஒரு வேளை சந்தித்தால் அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு அவர் பங்கேற்கும் முதல் பிரஸ் மீட்டாக அது அமையும். கட்சி ஆரம்பித்த பின்னர் இதுவரை ஒருமுறை கூட அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்க்கு கட்சி ஆரம்பித்து முதல் மாநாடு நடந்த இடம் விக்கிரவாண்டி, முதல் போராட்டக் களம் வீனஸ் வெட்டிங் ரிசார்ட் என்று எல்லாமே வி வி என்று வருவது எதார்த்தமானதா.. அல்லது திட்டமிட்டதா என்று தெரியவில்லை. இது திட்டமிட்டதாக இருந்தால் அடுத்து வேங்கைவாசல் கிராமத்துக்கும் விஜய் விசிட் அடிக்க வாய்ப்புண்டு என்று எதிர்பார்க்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!
இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!
கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்
வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!
தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!
SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி
ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு
காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?
{{comments.comment}}