மக்கள் அதிகம் கூடும் இடங்கள் சாலையோரங்களில் பேனர்கள் வைக்க வேண்டாம்: தவெக!

Jun 24, 2025,03:46 PM IST
சென்னை: மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், நெடுஞ்சாலையோரங்களிலும் கட்சியின் பேனர்கள் வைக்கக்கூடாது என கட்சினருக்கு தவெக உத்தரவிட்டுள்ளது.

சென்னை வில்லிவாக்கத்தில் தவெக தலைவர் விஜய் பிறந்நாளை முன்னிட்டு வைக்கப்பட்ட வாழ்த்து பேனர் சரிந்து விழுந்ததில் முதியவர் ஒருவர் காயமடைந்தார். இந்த சம்பவத்தை அடுத்து கட்சியினருக்கு தவெக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. 



இது தொடர்பாக தவெக  பொதுச்செயலாளர் என்.ஆனந்த வெளியிட்ட அறிக்கையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் அவர்களின் உத்தரவு மற்றும் அன்பு கட்டளையின் படி கழகத்தின் சார்பில் நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளும், விழாக்களும், உரிய அனுமதியுடன் மிகுந்த கண்ணியத்துடன் கட்டுப்பாட்டுடன் இருப்பதை கழக நிர்வாகிகள் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்.

இதுவரை, எந்த சூழலிலும் பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்களோ, விளம்பரப் பதாகைகளோ கழகம் சார்பில் வைக்கப்படவில்லை.

நம் வெற்றித் தலைவர் அவர்களும் பேனர்கள் மற்றும் விளம்பரப் பதாகைகள் வைப்பதை விரும்புவதோ ஊக்கப்படுத்துவதோ இல்லை. எனவே, கழகத் தலைவர் அவர்களின் உத்தரவை மாநிலம், மாவட்டம், நகரம், ஒன்றியம், பேரூர், கிளைக்கழகம் மற்றும் சார்பு அணிகள் உள்ளிட்ட கழகத்தின் அனைத்து நிலையிலான அமைப்புகளும் மிகவும் கண்டித்துடன் பின்பற்ற வேண்டும்.

குறிப்பாக, நகரில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும், நெடுஞ்சாலையோரங்களில் கழகத்தின் சார்பில் பேனர்கள் எந்த காரணத்திற்காகவும் அறவே வைக்கக்கூடாது.

இது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளையும், காவல்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிந்து, கழக வழக்கறிஞர்கள் அணியின்  உதவியுடன் செயல்பட வேண்டும் என்று கழக நிர்வாகிகள், தோழர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வைக்கத்தாஷ்டமி திருவிழா ... வைக்கம் ஸ்தலத்தின் சிறப்புகளை அறிவோம்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

news

தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று உயர்வு.... சவரனுக்கு ரூ.240 உயர்வு!

news

Crab.. வீட்டுக்கு நண்டு வந்தா நல்லதா கெட்டதா?.. வாங்க தெரிஞ்சுக்கலாம்!

news

சொர்க்கமே என்றாலும் அது எங்கூரைப் போல வருமா.. வாக்கப்பட்ட மண்!

அதிகம் பார்க்கும் செய்திகள்