டெல்லி: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மனு செய்யப்பட்டுள்ளது. பிற கரூர் வழக்குகளோடு இணைத்து இதை விசாரிப்பதாக தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 3 அன்று, ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழு (SIT) அமைத்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை வழக்கறிஞர்கள் டிக்சிதா கோஹில், பிரஞ்சல் அகர்வால் மற்றும் யஷ் எஸ் விஜய் ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், காவல்துறை விசாரணை சுதந்திரமாக இல்லை என்று உயர் நீதிமன்றமே கருத்து தெரிவித்திருந்த நிலையில், மாநில காவல்துறை அதிகாரிகளை மட்டுமே கொண்ட SIT அமைத்திருப்பது நியாயமற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறி வருகிறார். அக்டோபர் 6 அன்று மாலை, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார். கரூர் அருகே நடந்த கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்திக்காதது குறித்து சில தரப்பினரிடமிருந்து விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில், விஜய் இந்த வீடியோ அழைப்புகளை தொடங்கியுள்ளார்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தின் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், விஜய் என் மருமகனுக்கு அழைப்பு விடுத்து, உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். இந்த சம்பவம் நடந்திருக்கக் கூடாது என்றும், இது வருந்தத்தக்கது என்றும் கூறினார். மேலும், குடும்பத்திற்கு தனது ஆதரவை உறுதிப்படுத்தினார் என்றார். மற்றொரு குடும்பத்தினரிடம் பேசிய விஜய், நான் உங்கள் மகன் போல என்று ஆறுதல் கூறினார்.
பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு-இடை நிலை ஆசிரியர்களுக்கு விரைவில் நற்செய்தி-அமைச்சர் தகவல்
அதிமுக நேர்காணல்...சென்னை நிர்வாகிகளை வறுத்தெடுத்த இபிஎஸ்
ராகுல் காந்தியின் ‘ஜனநாயகன்’ ஆதரவு ட்வீட்: உறுதியாகிறதா காங்கிரஸ்-தவெக கூட்டணி?
விஜய்யை சாதாரணமாக எடை போட முடியாது... விஜய்க்கு தனி கூட்டம் உள்ளது: அண்ணாமலை
பொங்கலுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை: வானிலை மையம் தகவல்!
மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பராசக்தி படக்குழுவினர்
சென்னையைச் சுற்றிப் பார்க்க 'சென்னை உலா': புதிய சுற்றுலாப் பேருந்து சேவை தொடக்கம்!
லீக்கான கூட்டணி பிளான்...நெருக்கடியில் டிடிவி தினகரன்
தம்பி அண்ணாமலைக்கு.. தமிழ் இனத்தின் மகனாக நாங்கள் துணை நிற்போம்.. சீமான்
{{comments.comment}}