தெஹ்ரான் : ஈரானில் நடத்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பில் சுமார் 103 பேர் உயிரிழந்துள்ளனர். 141 க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஈரானின் தெற்கு பகுதி நகரமான கெர்மானில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் சுமார் 103 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் ஏராளமானவர்கள் மிகவம் மோசமாக காயடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இதுவரை 141 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளதாகவும், இவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

2020ம் ஆண்டு பாதுகாப்பு படையினர் மீது பெரும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் ஈரானின் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு அதில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஷாஹிப் அல் ஜமான் மசூதி அருகே ஏராளமான மக்கள் கூடியிருந்த சமயத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தை நேரில் கண்ட அடையாளம் தெரியாத பெண் ஒருவர் அலறும் காட்சிகள் அந்நாட்டு தொலைக்காட்சிகளில் பகிரப்பட்டு வருகிறது.
அந்த பெண் கூறுகையில், நான் காயமடையவில்லை. ஆனால் என்னுடைய ஆடை முழுவதும் ரத்தம். இந்த தெருவின் மற்றொரு பக்கத்தில் நான் நடந்து சென்று கொண்டிருந்த போது பயங்கர சத்தத்துடன் இந்த குண்டு வெடித்ததாக அவர் தெரிவித்துள்ளார். முதல் குண்டுவெடிப்பு, இரண்டாவது குண்டுவெடிப்பை விட சக்தி வாய்ந்ததாக இருந்ததாக அந்நாட்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த குண்டுவெடிப்புக்கு ஈரான் அதிபர் ரைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த ஈனச் செயலில் ஈடுபட்டவர்கள் வேட்டையாடப்படுவார்கள், கடும் தண்டனைக்குள்ளாவார்கள் என்று ்அவர் எச்சரித்துள்ளார்.
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}