டெல்லி : உலகம் முழுவதும் எக்ஸ் எனப்படும் ட்விட்டர் தளம் முழுவதுமாக முடங்கி டிவிட்டராட்டிகளை ஆட்டம் காணச் செய்து விட்டது..இதனால் எக்ஸ் தளத்தை பயன்படுத்த முடியாமல் பயனாளர்கள் தவித்து வந்தனர். கிட்டத்தட்ட 2 மணி நேரம் வரை முடங்கிய எக்ஸ் தளம், பிறகு மீண்டும் செயல்பட துவங்கியது.
உலகம் முழுவதிலும் உள்ள சோஷியல் மீடியா பயனாளர்கள் அதிகம் பயன்படுத்தும் தளமாக இருந்து வருகிறது ட்விட்டர். இந்த நிறுவனத்தை கடந்த ஆண்டு எலன் மாஸ்க் வாங்கினார். அதற்கு பிறகு இதில் பல மாற்றங்களை செய்தார். முதலில் ட்விட்டர் லோகோவை மாற்றிய எலன் மஸ்க், சமீபத்தில் ட்விட்டர் என்ற பெயரையே எக்ஸ் என மாற்றினார்.
செய்திகள் உள்ளிட்ட உலக நிகழ்வுகளை உடனடியாக தெரிந்து கொள்வது, தங்களின் கருத்துக்களை பதிவிடுவது, மற்றவர்கள் பதிவிற்கு நம்முடைய கருத்தை தெரிவிப்பது என பலவற்றையும் பயனாளர்கள் எக்ஸ் தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
டிசம்பர் 21 ம் தேதியான இன்று காலை சுமார் 10.30 மணியளவில் எக்ஸ் தளம் முற்றிலுமாக முடங்கியது. பயனாளர்கள் தங்களின் பதிவுகள், புரொஃபைல் பக்கம், விளம்பரம் என எதையும் பார்க்க முடியவில்லை. ஏற்கனவே இது போல் பலமுறை ட்விட்டர் தளம் முடங்கி உள்ளது. உலக அளவில் ஏதாவது அதி முக்கிய நிகழ்வுகள் நடக்கும் போது அதை பற்றி கருத்து பதிவிடவும், தற்போதைய நிலவரத்தை தெரிந்து கொள்ளவும் பயனாளர்கள் ஒரே நேரத்தில் அதிகமாக குவிந்தால் இது போன்ற நிலை ஏற்படும். ஆனால் இன்று அப்படி எந்த முக்கிய நிகழ்வும் நடக்காத நிலையில் என்ன காரணத்தால் எக்ஸ் தளம் முடங்கி உள்ளது என தெரியவில்லை.
ட்விட்டர் முடங்குவதற்கு முன்பே #TwitterDown என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாக இருந்து வந்தது. இது என்னவென்று தெரிந்து கொள்வதற்குள் முற்றிலுமாக முடங்கிப் போனது. இந்த ஹாஷ்டேக்கை பார்த்து விட்டு பலரும் ட்விட் போட்டனர். ஆனால் அது எதுவும் போஸ்ட் ஆகவில்லை. இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் எக்ஸ் தள பயனாளர்கள் இந்த பிரச்சனையை எதிர்கொண்டனர். இந்நிலையில் கிட்டதட்ட 2 மணி நேரத்திற்கு பிறகு 12.30 மணியளவில் மீண்டும் எக்ஸ் தளம் செயல்பட துவங்கியது.
பிறகென்னப்பா.. லன்ச்சை முடிச்சுட்டு மறுபடியும் ரிலாக்ஸ்டா டிவீட் போட்டு "விளையாட" ஆரம்பிக்கலாம் வாங்க!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}