அபுதாபி: அரிய மரபணு நோயினால் கல்லீரல் பாதிப்பில் தவித்து வந்த நான்கு வயது மகளுக்கு தனது கல்லீரலில் ஒரு பகுதியை தானமாக வழங்கி அவரது உயிரைக் காத்துள்ளார் தந்தை.
கடந்த 14 ஆண்டுகளாக அபுதாபியில் வசித்து வருபவர் தான் இம்ரான் கான். இவருக்கு வயது 40 ஆகும். இவருக்கு ஷைமா என்ற மகள் இருந்தார். ஷைமாவுக்கு பேமிலியல் இன்ட்ராஹெபாடிக் கொலஸ்டாசிஸ் டைப் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு 2019ம் ஆண்டு உயிரிழந்தார். அதன்பின்னர் இம்ரான் கானுக்கு ரசியா என்ற மகள் பிறந்தார். அந்த சிறுமிக்கும் அதே வகையான உயிரை கொல்லும் கல்லீரல் நோய் தாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தனியார் மருத்துவமைனயில் சேர்க்கப்பட்ட அந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை மூலம் நோயை குணமாக்க சுமார் 2 கோடியே 30 லட்சம் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சாதாரண ஊழியரான அவருக்கு அந்த தொகையை தயார் செய்வது கடினமாக இருந்தது. இதனால் இம்ரான் கான் மிகுந்த மன வேதனை அடைந்தார். தன்னால் முயன்ற அளவு பணத்தை திரண்ட முயன்றார். ஒரு மகளை இழந்த அவருக்கு இந்த மகளையாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்தது. அதன்பின்னர், தொண்டு அமைப்பான செம்பிறை சங்கத்தை தொடர்பு கொண்டார். அந்த அமைப்பினர் கல்லீரல் கிடைத்தால், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை இலவசமாக செய்து தருவதாக கூறினர்.
இதனை அடுத்து கல்லீரல் தானத்திற்காக பல இடங்களில் முயற்சி செய்த இம்ரான் கான். கடைசியில் தனது கல்லீரலின் ஒரு பகுதியை மகளுக்காக தானமாக கொடுக்க முடிவு செய்தார். மருத்துவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்த நிலையில், 12 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது ரசியாவிற்கு. இந்த சிகிச்சைக்கு பின்னர் தந்தை, மகள் இருவரும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அறுவை சிகிச்சைக்கு பின்னர் இம்ரான் கான் கூறுகையில், எனது மகளின் கண் எப்போதும் மஞ்சளாகவே இருக்கும். இப்போது தான் தெளிவாக உள்ளதை காண்கிறேன். தந்தை என்ற முறையில் எனது மகளுக்காக நான் தான் இதனை செய்ய வேண்டும். அதன்படி அதை செய்தேன் என தெரிவித்தார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}