லண்டன்: இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். பாலஸ்தீன ஆதரவு பேரணிக்கு மட்டுமே காவல்துறை ஆதரவு தருவதாகவும், எதிர்ப்புப் பேரணிக்கு ஆதரவு தருவதில்லை என்று அவர் குறை கூறிப் பேசியதால் பிரதமர் ரிஷி சுனக் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
இங்கிலாந்து அமைச்சரவையில் மூத்த அமைச்சரான சுயெல்லா டிஸ்மிஸ் செய்யப்பட்டிருப்பது இங்கிலாந்து அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் சுயெல்லா பிரேவர்மேன் பேசும்போது, காவல்துறை பேரணிகளுக்கு அனுமதி தருவதில் பாரபட்சமாக நடந்து கொள்கிறது. பாலஸ்தீன ஆதரவு பேரணிகளுக்கு அனுமதி தரப்படுகிறது. ஆனால் பாலஸ்தீன எதிர்ப்புப் பேரணிகளுக்கு அனுமதி தரப்படுவதில்லை என்று கூறியிருந்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சுயெல்லாவின் பேச்சு தேவையில்லாத பதட்டத்தை ஏற்படுத்தும், வலது சாரி போராட்டக்காரர்களை ஊக்குவிக்க உதவும் என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். பிரதமர் ரிஷி சுனக்கின் உத்தரவையும் மிறி சுயெல்லா செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில்தான் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளார் பிரதமர் ரிஷி சுனக்.
43 வயதான சுயெல்லா இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். கோவாவில் பிறந்தவர். அவரது பேச்சுக்கு அமைச்சர்கள் பலரும் கூட எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சுயெல்லாவின் பேச்சு லண்டன் போலீஸாரை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும் பலர் கண்டித்திருந்தனர்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}