3.8 கி.மீ தூரத்திலிருந்து.. ஒரே டுமீல்.. அதிர வைத்த உக்ரைன் ராணுவ வீரர்.. ரெக்கார்ட் பிரேக்!

Nov 21, 2023,05:06 PM IST

கீவ்:  உக்ரைன் ராணுவ வீரர் ஒருவர் வெகு தூரத்திலிருந்து அதாவது 3.8  கிலோமீட்டர் தொலைவிலிருந்து ரஷ்ய ராணுவ வீரர் ஒருவரை சுட்டுக் கொன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது. உலக சாதனையாக இதை உக்ரைன் தரப்பு பெருமையாக சொல்லி வருகிறது.


இதுதொடர்பான செய்தி ஒன்றை நியூஸ்வீக் வெளியிட்டுள்ளது. உக்ரைன் ராணுவத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர், (உக்ரைன் செக்யூரிட்டி சர்வீஸ் பிரிவைச் சேர்ந்தவர்) ரஷ்ய வீரர்களின் நடமாட்டத்தைக்  கண்டறிந்துள்ளார். ஊடுறுவி வந்த அவர்களை கிட்டத்தட்ட 3.8 கிலோமீட்டர் தொலைவிலிருந்து அவர் தனது ஸ்னைப்பார் துப்பாக்கியால் குறி பார்த்து சுட்டார். இதில் ஒரு ரஷ்ய ராணுவ வீரர் உயிரிழந்தார். மற்ற வீரர்கள் பின்வாங்கிச் சென்று விட்டனர்.


மிக மிக தூரத்திலிருந்து குறி பார்த்து சுட்டு ஒருவரை வீழ்த்தியிருப்பது சர்வதேச போர்க்களத்தில் இதுவே முதல் முறை என்று கருதப்படுகிறது. அந்த வகையில் இது கின்னஸ் சாதனைக்கும் தகுதியானது என்று உக்ரைன் தரப்பு கூறியுள்ளது.




உக்ரைன் வீரர் துப்பாக்கியால் சுட்டதும் ரஷ்ய ராணுவ வீரர்கள் வேகமாக தரையில் படுத்து மேலும் உயிர்ச்சேதம் ஏற்படாமல் தவிர்க்க முயல்வதும் ஸ்னைப்பரில் தெளிவாக பதிவாகியுள்ளது.


கனடா படையின் முந்தைய சாதனை


இதற்கு முன்பு 2017ம் ஆண்டு ஈராக்கில் நடந்த போரின்போது அமெரிக்க கூட்டுப் படையில் இடம் பெற்றிருந்த கனடா சிறப்புப் படைப் பிரிவு வீரர் ஒருவர் 3.54 கிலோமீட்டர் தொலைவிலிருந்து சுட்டதே சாதனையாக இருந்து வந்தது. தற்போது அதை உக்ரைன் வீரர் மிஞ்சியுள்ளார்.


அதற்கு முன்பு 2009ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் போரில் ஈடுபட்டிருந்த இங்கிலாந்து வீரர் கிரேக் ஹாரிசன் என்பவர் 2.48 கிலோமீட்டர் தொலைவிலிருந்து சுட்டு தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒரு போராளியை சுட்டுக் கொன்றார் என்பது நினைவிருக்கலாம்.


உக்ரைன் - ரஷ்யா போர் ஒரு ஆண்டைக் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. இரு தரப்பிலும் பல ஆயிரம் பேர் உயிரிழந்து விட்டனர். உக்ரைனின் பல நகரங்கள் சேதமடைந்து விட்டன. விடாமல் இரு தரப்பும் போர் புரிந்து கொண்டுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்