- உமாராணி சங்கரலிங்கம்
அருட்பெருஞ்ஜோதி.
ஓம் நமசிவாய.
திருச்சிற்றம்பலம்.
ஜூலை 9,2022.
சனிக்கிழமை.
கட்ரா hotel இல்உள்ள tvஇல் news பார்த்தோம். அமர்நாத் குகையில் 8ஆம் தேதி cloud burst நடந்தது என்றும், மழை பெய்து கொண்டிருப்பதாகவும் , நாங்கள் தங்கியிருந்த tent எல்லாம் அடித்து சென்று விட்டன என்றும் கூறினார்கள். 5 பேர் வெள்ளத்தில் அடித்துச் சென்று விட்டார்கள் என TV news இல் கூறினார்கள்.
இரவு 11.30 மணிக்குச் சரியான மழை. நாங்கள் வைஷ்ணவி தேவி கோவிலுக்குச் செல்வதற்கு 11 பேர் ready ஆகினோம். மழை பெய்து கொண்டே இருந்ததால் அதிகாலை 2.30 க்கு hotel லிலிருந்து auto வில் கோவிலுக்குக் கிளம்பினோம். கோவில் மலை மேலே இருந்தது. இருபுறமும் கடைகளாக இருந்தன. இரவு நேரம் ஆனதால் நிறையக் கடைகள் மூடி இருந்தன. கோவிலுக்குச் செல்லும் பாதை படிகளாகவும்,மேற்புறம் முழுவதும் cover பண்ணியும் இருந்தார்கள். கூட்டமே இல்லை. திரும்பி ஆட்கள் நடந்தும், குதிரையிலும் வந்து கொண்டிருந்தனர்.

அங்குள்ள குதிரைகள் மிக உயரமாக இருந்தன. குதிரையில் ஏறியதும் ஓம் நமசிவாய மந்திரத்தையும், காப்புப் பாடலையும் பாடினேன்.சில இடங்களில் வெளிச்சம் இல்லாமல் இருட்டாக இருந்தன. 6.30க்குக் கோவிலை அடைந்தோம்.6 to 8 தரிசனம் கிடையாது. உள்ளே பூஜை நடப்பதால் தரிசனம் கிடையாது. நம்மை Queue இல் நிறுத்தி விடுகிறார்கள். Queue நிற்பதற்கு முன் அங்குள்ள locker இல் நமது ஃபோன்,hand bagகளை வைத்து விட்டுப் பின்னர் தரிசனத்திற்குச் சென்றோம். 8 மணிக்கு மேல் தரிசனத்திற்கு allow பண்ணினார்கள்.
சிறு குகைக்குள் மூன்று பீடங்கள். லட்சுமி,சரஸ்வதி, வைஷ்ணவி தேவிகளாக நமக்குக் காட்சி தருகிறார்கள். வெளியே வந்தோம். மழை தூறல் . அருமையான climate. மிக, மிக அதிகமான கூட்டம். சிலர் நடந்து கீழே இறங்கினர். நாங்கள் குதிரையில் வந்தோம். பாதை மிகவும் வழுக்கலாக இருந்தது. 11.45 மணி அளவில் ஆட்டோ மூலம் hotel க்கு வந்து விட்டோம்.
எல்லாவற்றையும் pack பண்ணி ஒரு அறையில் வைத்து விட்டு சாப்பிட்டு விட்டு திரும்ப மற்ற இடங்களைப் பார்க்கச் சென்றோம். சாமுண்டீஸ்வரி கோவில்,ஓம் பாபா கோவில், நவக்கிரக கோவில்,பூமிகா கோவில் சென்றோம். பின்னர் ஓம் ஸ்ரீதர் பாபாஜி குகைக் கோவில் என எல்லாவற்றையும் பார்த்து விட்டு கட்ரா இரயில்வே ஸ்டேஷனுக்கு 6.30 மணிக்குச் சென்றோம். 7.55 க்கு டில்லி செல்லும் train இல் ஏறி அமர்ந்தோம்..
10.7.2022

காலை டில்லிக்கு வந்து சேர்ந்தோம். சிலருக்கு மட்டும் Flight. மற்றவர்களுக்கு அன்று மாலை தான் சென்னைக்கு train . மற்றவர்களிடம் விடை பெற்றுக் கிளம்பினோம். நாங்கள் guest house க்குச் செல்லும் வழியில் கோவை செல்லும் அன்பு அண்ணா,தேவசேனாவை airport இல் விட்டு விட்டு நாங்கள் guest house சென்று கிளம்பிப் பின் airport சென்றோம். Luggage சரியாக 29.500 கிலோ இருந்தது. எங்களுக்கு 1.30மணிக்கு flight. ஏக இறைவனுக்கும், அம்மை அப்பனுக்கும் நன்றி செலுத்திப் பத்திரமாகச் சென்னை வந்து சேர்ந்தோம்.
இந்த 12நாட்களும் என்னுடைய கண்ணோட்டத்தில் அமர்நாத் யாத்திரையை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். படித்த அனைவருக்கும் மிக்க நன்றி.
ஓம் நமசிவாய.
திருச்சிற்றம்பலம்.
(உமாராணி சங்கரலிங்கம், யோகா முத்ரா பயிற்சியாளர், மன உளவியலாளர்)
அதிமுகவினரின் வேதனை போதும்.. இளைஞர்களுக்கு வழி விடுங்கள்.. ராஜ் சத்யன்
பிரேமலதா விஜயகாந்த் கேட்டிருந்தால், விஜய் துணை முதல்வர் பதவியைக் கொடுத்திருப்பாரா??
புதிய கட்சி துவங்குகிறாரா அண்ணாமலை?.. பாஜக தலைவரை சந்திக்க டெல்லி விரைந்தார்
ADMK to TVK: அதிமுக வினர் தவெகவில் இணைவது ஏன்? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
ஏக இறைவனுக்கும்.. அம்மை அப்பனுக்கும் நன்றி செலுத்தி.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 12)
வானவில்!
ரோஜாக்களின் முடிவு!
அலுவலக அவசரம்
Dr Latha Poems: இயற்கையெனும் அழகு.. மெளனமும் பழகிடு
{{comments.comment}}