ஒரே நாளில் வெளியான.. அண்ணாமலை, சூரிய வம்சம்.. வயசானாலும் அந்த ஸ்டைலும், கன்டென்ட்டும்.. இன்றும் செம!

Jun 27, 2024,05:43 PM IST

சென்னை: ஜூன் 27ஆம் தேதி .. தமிழ் சினிமாவில் இந்த தேதியை மறக்க முடியாது. காரணம் இதே நாளில்தான் இரு பெரும் திரைப்படங்கள் ரசிகர்களை உற்சாகத்திற்குக் கொண்டு சென்றன. ஒன்று அண்ணாமலை.. இன்னொன்று சூரிய வம்சம்.


இதில் முதலில் வெளியானது சூப்பர் ஸ்டாரின் அண்ணாமலைதான். 1992 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாமலை திரைப்படம் இன்றுடன் 32 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளது. சரியாக 5 வருடம் கழித்து, 1997ம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி  சரத்குமார், தேவயானி நடிப்பில் வெளியான சூரியவம்சம் திரைப்படம் 27 ஆண்டு நிறைவடைந்துள்ளது.




தமிழ் சினிமாவில் 90களில் வெளிவந்த படங்கள் என்றாலே தனி மவுசு தான். அது ஒரு வகையான பொற்காலம் என்று கூட சொல்லலாம். அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த படங்கள் இன்று வரை ட்ரெண்டிங்கில் உள்ளன. அப்போது வந்த படங்களை வைத்து இப்போது வரை ஏகப்பட்ட மீம்கள் வருகின்றன.. அந்தப் படங்களை நினைத்து இப்போதைய தலைமுறையினர் ஏங்கும் நிலையும் அதிகரித்து வருகிறது. இப்போதும் கூட அப்படங்களை மக்கள்  ரசித்து மகிழ்கின்றனர். 


அப்படி 90களில் பல நட்சத்திரங்களின் நடிப்பில் நூற்றுக்கணக்கான படங்கள் வெளிவந்துள்ளது. அவற்றில் ஒரு சில படங்களை எப்போதுமே மறக்க முடியாது. குறிப்பாக தளபதி, தேவர்மகன், சின்ன கவுண்டர்,  அஞ்சலி, பாஷா உள்ளிட்ட வித்தியாசமான கதை அமைப்பைக் கொண்ட நூறுக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இது மட்டுமா காதலை விதவிதமாக தூது செல்லும்  காதலை மையப்படுத்தி வந்த எத்தனையோ படங்கள் இன்று வரை காதல் உணர்வை தூண்டும் அங்கமாகவே இருந்து வருகிறது. 


அதில் காதலே நிம்மதி, காதலுக்கு மரியாதை, காதல் கோட்டை, லவ் டுடே, காதலா காதலா, காதல் தேசம், காலமெல்லாம் காதல் வாழ்க, காதலுடன், காதலர் தினம் என காதல் தலைப்பில் அதிக படங்கள் வெளிவந்தன. இப்படங்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. விசேஷம் என்னவென்றால் அத்தனை படங்களிலும் பாடல்கள் அத்தனை தித்திப்பாக இடம் பெற்றிருந்தன.


சூரியவம்சம்:




90களில் வெளியான ஒரு மெகா ஹிட் படம்தான் சூரிய வம்சம். புதுமை, காதல் என்ற அடிப்படையில் உருவான படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட குடும்பப் பின்னணியில் உருவானள சூரியவம்சம் திரைப்படம் கடந்த 1997 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி வெளிவந்தது. இப்படம் அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்தது. மேலும் தமிழில் நல்ல வரவேற்பு பெற்றதால் இப்படம் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், போன்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு எல்லா மொழிகளிலும் ஹிட்டடித்தது.


விக்ரமன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சரத்குமார் தந்தை, மகன் என இரண்டு வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார். இவருடன் நடிகை தேவயானி, ராதிகா, பிரியா ராமன், ஆனந்தராஜ், மணிவண்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சூப்பர் ஹிட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக இப்படத்தில் அமைந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் கொடுத்தது. 


அதிலும் ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ என்ற பாடல் கடந்த காதல் அனுபவங்களை நினைவு கூறும்  விதத்தில் இன்று வரை இதயங்களில் ரீங்காரமிட்டுக் கொண்டுள்ளது. இந்தப் படத்தில் சரத்குமார் ஏற்று நடித்த சின்ராசு கதாபாத்திரமும், ராதிகா பேசும் வசனமும் மீம்ஸ்களில் இன்று வரை கலக்கலாக ஓடிக் கொண்டுள்ளன. சூரியவம்சம் திரைப்படம் இன்றுடன் திரைக்கு வந்து 27  ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.


அண்ணாமலை:




90களில் குடும்பம் மற்றும் நட்பை மையமாகக் கொண்டு ஏழை பால்கார மற்றும் பணக்கார நண்பர்கள் இடையே ஏற்படும் பிளவை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை அழகாக எடுத்துரைத்த படம் தான் அண்ணாமலை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேரியரில் பக்கா மாஸ் படங்களில் ஒன்றாக இருப்பது அண்ணாமலை தான். இப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்று 175 நாட்களில் ஓடி சாதனை படைத்தது. 


இப்படத்தில் ரஜினிகாந்த் மாஸ் என்ட்ரி முதல் நண்பர்கள் இருவரின் பிரிவு வரை அனைத்தும் பட்டையைக் கிளப்பியது. ரஜினிகாந்தின் நடிப்பிற்கு இணையாக நடிகை குஷ்புவின் நடிப்பும் பிரபலமாக பேசப்பட்டது.  அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆவேசமாக பேசும் அசோக் உன் காலண்டரில் இந்த தேதியை குறிச்சு வச்சுக்கோ.. மலைடா அண்ணாமலடா.. என்ற மாஸ் காட்டும் டயலாக்குகள் கர ஒலியால் திரையரங்கமே அதிர்ந்தது.


இப்படம் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் அதிக வசூலை வாரிக் குவித்த படங்களில் ஒன்றாகவும் திகழ்ந்தது. 1992 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், கவிதாலயா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ரஜினிகாந்த், குஷ்பூ, சரத் பாபு, மனோரமா, மற்றும் பலர் நடித்திருந்தனர். அண்ணாமலை திரைப்படம் திரைக்கு வந்து இன்றுடன் 32 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.


முடிஞ்சா யூடியூபில் இந்த இரு படங்களையும் பார்த்து செலபிரேட் பண்ணுங்க!

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்