சென்னை: இரண்டு நாள் பயணமாக நாளை இரவு சென்னை வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற 2026ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் வேலைகளை தற்போது துவங்கியுள்ளன. அதன்படி, பாஜக கட்சியும் அதன் தேர்தல் வேலைகளில் தீவிரம் காண்டி வருகிறது. இந்த தேர்தல் வேலைகள் குறித்து ஆலோசிக்க நாளை திடீர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகிறார்.
நாளை இரவு 10.30 மணிக்கு சென்னை வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா மறுநாள் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக அரசியல் கட்சியின் தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக அதிமுக கூட்டணியில் இணைய உள்ள நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமின்றி தமிழக மாநில தலைவர் பதவி வகித்து வரும் அண்ணாமலை மாற்றப்பட உள்ள நிலையில், தமிழகம் வரும் அமித்ஷா பாஜகவின் அடுத்த தமிழக தலைவர் யார் என்பது குறித்து பாஜக கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசிக்க உள்ளதாகவும் தெரிகிறது. நாளை தமிழகம் வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பயணத்தினால் பல முக்கிய முடிவுகள் குறித்து முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து.. தமிழ்நாட்டை படுகுழியில் தள்ளிவிடும்.. மு.க.ஸ்டாலின்
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது.. முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவிப்பு
பாஜகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறார் நடிகர் தேவன்: பரபரப்பு பேட்டி!
Motivational Short Story: சிற்றுயிர்களின் விழிப்புணர்வு மாநாடு
உள்ளபடிக் குடிநீரும் உப்பும் தான் கரிக்குதே!
387 வயசு இளமையான சென்னை.. எத்தனை எத்தனை சிறப்புகள்!
உதவியை உயர்ந்தவர்களுக்கு செய்வதை விட ஒருவரை உயர்த்துவதற்காக செய்!
Short Story: ருத்ர தாண்டவம்!
புரியாப் புதிர்!
{{comments.comment}}