சென்னை: நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளரும் மத்திய இணை அமைச்சருமான எல் முருகன்,இதுவரை யாரும் எதிர்பாராத அரசியல் புரட்சி இந்த தேர்தலில் நடக்க போகிறது. ஜூன் நான்காம் தேதி உங்களுக்கே தெரியும். பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராவது உறுதி என்று கூறியுள்ளார்.
பாஜக, மத்திய இணை அமைச்சர் எல் முருகன் திருச்சி வந்திருந்தார். அங்குள்ள ஸ்ரீரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது முருகன் கூறியதாவது:
400க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக தான் வெற்றி பெறும். பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராவது உறுதி. ஏற்கனவே ஐந்து கட்ட தேர்தல்கள் நிறைவடைந்து உள்ள நிலையில் நிச்சயம் பாஜக 310 இடங்களையும் கைப்பற்றி முன்னணியில் வரும். காங்கிரஸ் 40 தொகுதிகள் கூட வெற்றி பெறாது.

திமுக கூட்டணி கண்டிப்பாக தோல்வியை சந்திக்கும். பிரதமர் பேசியதை சரியாக புரிந்து கொள்ளாமல் மக்களிடம் பொய்யாக திரித்து பேசி வருகிறார் தமிழக முதல்வர். தமிழ்நாட்டில் மிகப்பெரிய திருப்பம் வரப்போகிறது. இந்த தேர்தலில் 400 தொகுதிக்கு மேல் பாஜகவின் வெற்றி வரலாற்று சாதனையாக அமையும். இதுவரை யாரும் எதிர்பாராத அரசியல் புரட்சி இந்த தேர்தலில் நடைபெற உள்ளது.
ஜூன் நான்காம் தேதி உங்களுக்கே தெரியும். தமிழ்நாட்டில் பாஜகவின் மிகப்பெரிய வெற்றியை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாங்கள் சமர்ப்பிப்போம் என பேசி உள்ளார்.
Pralay Missile: ஏவுகணைகளின் பிறப்பிடம் ஆகிறதா இந்தியா?.. பிரமிக்க வைக்கும் பிரளய்!
பிறந்தது புத்தாண்டு.. இந்தியா முழுவதும் கொண்டாட்டம்.. மக்கள் மகிழ்ச்சி வெள்ளம்
100 கோடி நன்கொடை! கான்பூர் ஐஐடி மாணவர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்!
டிக் டிக் டிக்... கடிகாரம் மாட்டும் திசையை வைத்து வீட்டின் நன்மைகள் இருக்காம்... இதோ முழு விபரம்!
தானத்தில் சிறந்த தானம் எது தெரியுமா?
கரூர் சம்பவ வழக்கு...விரைவில் விஜய்க்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு
எங்கள் விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?.. மதிமுக, விசிக, கம்யூ.களுக்கு காங். எம்.பி. கேள்வி
முக்கிய முடிவுகள்?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன. 6ல் அமைச்சரவைக் கூட்டம்
திருவாதிரையில் ஒரு வாய் களி.. சரி அதை விடுங்க.. களி பிறந்த கதை தெரியுமா?
{{comments.comment}}